கணிதம் :: அலகியலும் அளவியலும்
201. செவ்வகம் என்றால் என்ன?
ஒரு நாற்கரத்தில் நான்கு கோணங்களும் அனைத்துச் சமமாக இருந்தால், அந்நாற்கரம் ஒரு செவ்வகம் ஆகும்.
202. கூம்பகம் என்றால் என்ன?
ஒரு கன உருவம். இது ஒரு பல கோணமாகும்.
203. இதன் வகைகள் யாவை?
1. செங்கோணக் கூம்பகம். 2. சாய்கூம்பகம். 3. ஒழுங்குக் கூம்பகம்.
204. ஆரம் என்றால் என்ன?
ஒரு வட்டத்தின் மையத்திலிருந்து அதன் பரிதியின் ஏதாவது ஒரு புள்ளிக்கு உள்ள தொலைவு. குறி r.
205. முதல்வரை (evolute) என்றால் என்ன?
வளைகோட்டிலுள்ள எல்லாப் புள்ளிகளின் வளைவு மையங்களின் திட்ட வழி (லோகஸ்), கொடுக்கப்பட்ட வளைகோட்டின் முதல்வரை என்பதாகும்.
206. சாய்கரம் என்றால் என்ன?
ஒர் இணைகரம். இது சாய்சதுரமன்று செவ்வகமுமன்று.
207. சாய்சதுரம் என்றால் என்ன?
ஒரு நாற்கரத்தில் நான்கு பக்கங்களும் அனைத்துச் சமமாக இருந்தால், அந்நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.
208. முகம் என்றால் என்ன?
ஒரு கன உருவத்தின் வெளிப்புறத் தட்டைப் பரப்பு.
209. அடிவெட்டு என்றால் என்ன?
ஒரு கன உருவத்தை இரு இணைகோடுகள் வெட்டுவதால் உண்டாகும் வடிவியல் கன உருவம்.
210. விரிவாக்கல் என்றால் என்ன?
வடிவியல் வீழல் ஒரு பிம்பத்தைப் பெருக்குவது. ஆனால் மூல வடிவம் போன்றே இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கூம்பகம்