கணிதம் :: அலகியலும் அளவியலும்
211. இயற்றி என்றால் என்ன?
ஒரு பரப்பை உண்டாக்கும் கோடு. எ-டு. கூம்பு, உருளை அல்லது கன உருவத்தின் சுழற்சி.
212. பிம்பம் என்றால் என்ன?
வடிவியல் உருமாற்ற விளைவு. எ.டு. வடிவியலில் புள்ளி அல்லது புள்ளித் தொகுதி. ஒரு வரியில் ஏற்படும் எதிரொளிப்பினால் வேறொன்றாக மாறும்பொழுது எதிரொளித்த உருவம் பிம்பம் ஆகும்.
213. இயக்குவரை என்றால் என்ன?
1. ஒரு கூம்புவரையுடன் இயைந்த நேர்க்கோடு.
2. ஒரு கூம்பு அல்லது உருளையின் அடியை வரையறை செய்யும் தள வளைகோடு.
214. தொடு வட்டங்கள் என்றால் என்ன?
ஒன்றை மற்றொன்று வெட்டும் வட்டங்கள். இவ்விரண்டும் ஒன்றை மற்றொன்று தொட்டுக் கொண்டால், அவற்றின் மையங்களும் தொடுபுள்ளியும் ஒரே கோட்டில் அமையும்.
215. தொடுவரை (டேன்ஜன்ட்) என்றால் என்ன?
1. தன் வழியாக வெட்டாமல் ஒரு பரப்பு அல்லது வளை கோட்டைத் தொடும் நேர்க்கோடு அல்லது தளம்.
2. ஒரு கோணத்தின் முக்கோணவியல் சார்பு. செங்கோன முக்கோணத்தில் a கோணத்தின் தொடுவரை என்பது அடுத்துள்ள பக்க நீளத்திற்கும் அதற்கு எதிராக உள்ள பக்கங்களுக்கும் உள்ள வீதமாகும்.
216. ஈராறுமுகமி (duodecahedron) என்றால் என்ன?
12 முகங்களைக் கொண்டபல கோணம் ஒழுங்கான ஈராறு முகமி. 12 அனைத்து ஒத்த முகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒர் ஒழுங்கான ஐம்பக்க உருவமாகும்.
217. ஈராறுதசம எண் (duodecimal) என்றால் என்ன?
12 இன் அடிப்படையில் அமைந்தது. இந்த எண் முறையில் பத்திற்குப் பதிலாக வேறுபட்ட எண்கள் இருக்கும். எ-டு. 10, 11 ஆகிய இரண்டும் A, B என்று குறிகள் பெறும்.
218. வெட்டல் என்றால் என்ன?
1. ஒரு புள்ளியில் இரண்டிற்கு மேற்பட்ட கோடுகள் ஒன்றை மற்றொன்று கடத்தல் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வடிவியல் உருவங்கள் பொதுவாகக் கொண்டுள்ள புள்ளித் தொகுதி.
2. கணக் கொள்கையில் இரண்டிற்கு மேற்பட்ட கணங்களுக்குப் பொதுவான உறுப்புகளால் தோன்றும் கணம்.
219. வெட்டுத்துண்டு என்றால் என்ன?
ஒரு தளம் அல்லது கோட்டின் பகுதி மற்றொரு தளம் அல்லது கோட்டால் வெட்டப்படுதல்.
220. மூலைவிட்டம் என்றால் என்ன?
எதிர்மூலைகளைச் சேர்க்கும் விட்டம். எ-டு. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் அதை இரு அனைத்து செங்கோண முக்கோணங்களாக வெட்டவல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அல்லது, மேற்பட்ட, இரண்டிற்கு, ஒன்றை, மற்றொன்று, தளம்