கணிதம் :: எண் கணிதம்
21. இணைப்பண்பு என்றால் என்ன?
கூட்டல் பெருக்கல் முதலிய செயல்கள் சார்ந்த பண்பு.
(2) எண்கள் எண்கள்
22. என்றால் என்ன?
எண்ணுவதற்கும் அளப்பதற்கும் பயன்படும் குறியீடுகள்.
23. எண்களின் வகைகள் யாவை?
ஆதி எண், முழு எண், வீதமுறு எண், வீதமுறா எண், சிக்கல் எண் எனப் பலவகை.
24. இலக்கம் என்றால் என்ன?
ஒர் எண்ணின் பகுதியாக இருக்கும் குறியீடு. எ-டு. 3121 என்னும் எண்ணில் 4 இலக்கங்கள் உள்ளன. பொதுவான தசம எண் முறை 10 இலக்கங்களைக் கொண்டது (0-9). ஆனால், ஈரடினமான முறை இரண்டு இலக்கங்களை மட்டும் கொண்டது. 0, 1.
25. இது எதில் அதிகம் பயன்படுகிறது?
இது கணிப் பொறியில் அதிகம் பயன்படுகிறது.
26. உரோம எண்கள் யாவை?
I, II, II, IV முதலியவை உரோம எண்கள்.
27. உரோம எண்களைவிட அரபு எண்கள் சிறந்தவை. ஏன்?
எண்கள் எளிமையானவை. பத்து, நூறு, ஆயிரம் என்று அமைந்தவை. துல்லியமாகவும் விரைவாகவும் திறமையுடனும் கணக்கிடலாம்.
28. இந்து-அரபு எண்கள் ஐரோப்பாவில் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?
14, 15ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
29. இந்து-அரபு எண் முறையின் இயல்புகள் யாவை?
1. இதில் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்னும் பத்தே இலக்கங்கள் உண்டு.
2. இம்முறையில் இடமதிப்பு, பதிற்று மடங்கு எனப்படும் பத்தடிமான அடிப்படையில் கொள்ளப்படுவதால், எந்த ஒருமுழு எண்ணையும் எளிதாக எழுத இயலும்.இதனால் இம்முறைக்குப் பதின்மான எண்முறை என்று பெயர்.
30. இவற்றில் செய்யக் கூடியவை யாவை?
1. பதின்மான எண்முறையில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணித அடிப்படைச் செயல்களை சில விதிகளின்படி எளிதாகச் செய்யலாம்.
2. இந்த எண்முறை மனிதக் கண்டுபிடிப்புகளில் மிகப் பெரிய ஒன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எண்கள், யாவை, அரபு, உரோம, என்ன, என்றால்