கணிதம் :: எண் கணிதம்
111. தொகுதி என்றால் என்ன?
பின்னத்தின் உச்சிப்பகுதி.எ-டு. 3/4 என்னும் பின்னத்தில் 3 தொகுதி. 4 பகுதி. தொகுதி வகுபடுஎண்.
112. பகுதிப் பின்னங்கள் என்றால் என்ன?
குறிப்பிட்ட பின்னத்திற்குச் சமமான பின்னங்களின் கூட்டுத்தொகை.
எ-டு. 1/2 +1/4 = 3/4. பகுதிப் பின்னங்கள் தொடர்பாக வீதம் எழுதுவது என்பது சமன்பாடுகளைத் தீர்க்கவும் முழுக்களைக் கணக்கிடவும் பயனுள்ளதாக அமையும்.
113. தசம என்றால் என்ன?
பத்து அடிப்படையில் அமைந்தது என்பது பொருள். நாம் எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் தசம எண்முறையைத் தோற்றுவிப்பவை.
114. தசம பின்னம் என்றால் என்ன?
இப்பின்னம் ஒரு வீதமுறு எண். அலகுகளாகவும் பத்துகளாகவும் நூறுகளாகவும் ஆயிரங்களாகவும் எழுதப்படுவது. எ-டு. 1/4 = 0.25.
115. தசம பின்ன வகைகள் யாவை?
1. முடிவுறு தசமபின்னம் - 0.25,
2. மீள்வருதசமபின்னம் - துல்லியத் தசமமாக எழுத இயலாதது. 5/27 (=0.185 185 185....)
116. துல்லியத்திற்காகத் தசமம் எவ்வாறு எழுதப்படுகிறது?
7 இடங்கள் வரை எழுதப்படுகிறது.
எ-டு. π= 3.141593, 3.1415927.
117. தசமப் புள்ளி என்றால் என்ன?
சுழி அல்லது முழு எண்களுக்குப் பின் வைக்கப்படுவது. 0.185, 4.125.
(7) காரணி
118. காரணி என்றால் என்ன?
1. காரணி இரண்டிற்கு மேற்பட்ட எண்களைப் பெருக்கக் கிடைப்பது. 6, 4 ஆகிய இரண்டும் 24 இன் காரணிகள், 4 x 6 = 24,
2. வகுத்தி: ஒரு எண்ணை வகுக்கும் மற்றொரு எண். 24/6. இதில் 6 வகுத்தி.
119. காரணிப்படுத்தல் என்றால் என்ன?
ஒரு கோவையை அதன் காரணிகளின் பெருக்கல் பலனாக எழுதுதல். எ-டு. 3xy+ 6x2 = 3x(y+2x)
120. பொதுவேறுபாடு என்றால் என்ன?
எண்கணிதத் தொடரில் அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக் கிடையே உள்ள வேறுபாடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், காரணி, தொகுதி