கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
81. எண் கொள்கை இன்று பயன்படும் துறைகள் யாவை?
இயற்பியல், கணிப்பொறி அறிவியல், குறிமுறை வரைவியல். . .
82. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் யார்?
1. டேனியல் பெர்ட்ராண்ட் சைனவ் டேவிட் மைக்கல் பால்டுசிமித் பேரிஸ் பல்கலைக்கழகம்.
2. மெளரைஸ் மிக்னோட்டி, ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகம்.
3. டேல் பிரெளன்வெல், பென்சில்வேனியா பல்கலைக் கழகம்.
4. உல்ப்கேங் சிமிட், கொலராடோ பல்கலைக் கழகம்.
5. பிரான்செஸ்கோ அமோரோசோ, பைசா பல்கலைக் கழகம்.
6. கே.இராமச்சந்திரன், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்.
7. எஸ். இராகவன், சென்னை.
83. இராமானுஜன் இலண்டனில் தற்கொலை செய்து கொள்ள முயன்றது உண்மையா? காரணம் என்னவாக இருக்கலாம்.
தற்கொலை செய்து கொள்ள முயன்றது உண்மை. தான் நினைத்ததை உரிய காலத்தில் எட்ட முடியவில்லையே' என்னும் வெறுப்பு காரணமாக இருக்கலாம்.
84. தற்கொலை முயற்சி எவ்வாறு தோல்வியுற்றது?
பாதாள மின்தொடர் வண்டியின் மின்னணுக்கருவிகள் வழக்கம்போல் தாமாக ஏறி இறங்கவில்லை. தடை உண்டாகியது.
85. இராமானுஜன் உயிருக்கு எமனாக அமைந்த நோய் எது?
என்புருக்கி நோய்.
86. அவர் நோயுற்றிருந்த பொழுது தம் மாளிகையில் வைத்து உதவியவர் யார்?
இராவ் பகதூர் நம்பெருமாள் செட்டியார்.
87. இராமானுஜம் வாழ்ந்த ஆண்டுகள் எத்தனை?
32 ஆண்டுகள்.
88. இராமானுஜன் எப்பொழுது இறந்தார்?
1920 இல் இறந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பல்கலைக், கழகம், தற்கொலை, இராமானுஜன்