கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
71. இராமானுஜன் இதழ் எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது?
1997 இல், நெதர்லாந்து குல்வார் கல்வி வெளியீட்டாளர்கள்.
72. தொலைந்த குறிப்புச் சுவடியின் உருநகல் பதிப்பு எப்பொழுது வெளியாயிற்று?
1987 டிசம்பர் 22இல் வெளியாயிற்று. (இராமானுஜன் நூற்றாண்டு விழா). இதை வெளியிட்டார் பிரதமர் இராஜீவ் காந்தி.
73. இதில் எத்தனை தேற்றங்கள் உள்ளன?
சற்றேறக்குறைய 600 தேற்றங்கள் உள்ளன.
74. இராமனுஜன் புகழ் பரப்ப அருந்தொண்டு ஆற்றி வருபவர் யார்?
திரு. பி.கே.சீனிவாசன். கணித ஆசிரியர். இவர் தம் அரு முயற்சியால் 1968 இல் இவ்விரு நூல்கள் வெளிவந்தன. இராமானுஜன் கடிதங்களும் நினைவுகளும், இராமானுஜன் ஓர் உணர்வுந்தல்.
75. இராமானுஜன் அனைத்துலக நூற்றாண்டு விழா மாநாடு எங்கு எப்பொழுது நடைபெற்றது?
1987 டிசம்பர் 22 இல் சென்னையில் நடைபெற்றது.
76. இராமானுஜன் அருங்காட்சியகம் எங்குள்ளது?
சென்னை இராயபுரத்தில் அவ்வைக் கல்விக் கழகத்தில் 1993 இல் இது தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கக் காரணமாக இருந்தவர் தொண்டுள்ளம் படைத்த கணித ஆசிரியர் பி.கே. சீனிவாசன் மற்றும் ஏ.டிபி.போஸ்.
77. எண் கொள்கைக்குச் சிறந்த பங்களிப்புச் செய்தவர் யார்?
கணிதமேதை இராமனுஜன்.
78. எண் கொள்கை பற்றிய அனைத்துலகக் கருத்தரங்கம் எங்கு எப்பொழுது நடைபெற்றது?
1996 ஜனவரியில் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. - -
79. இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர் யார்?
பேராசிரியரும் கணக்கறிஞருமான கிருஷ்ணசாமி அல்லாடி.
80. எண் கொள்கை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
கணித இளவரசி எனச் சிறப்பிக்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இராமானுஜன், எப்பொழுது, நடைபெற்றது, யார், கணித