கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
21. இராமானுஜன், காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் யார்?
பி. சி. இராய். ஜே. சி.போஸ். .
22. இந்தியக் கணிதக் கழகம் எப்பொழுது தோற்றுவிக்கப் பட்டது? தோற்றுவித்தது யார்?
1907 இல், பேராசிரியர் இராமசாமி.
23. இராமானுஜன் நாட்டம் செலுத்திய மூன்று கருத்துகள் யாவை?
எண்கள். தேற்றம், நிகழ்தகவு.
24. இராமானுஜத்திற்கு மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில் எப்பொழுது வேலை கிடைத்தது? இதற்கு உதவியவர்கள் யார்?
1912 இல், பேரா.இராமசாமி அய்யர், பேரா.பி.வி. சேஷூ அய்யர்.
25. இராமானுஜனின் சிறந்த கல்லூரி நண்பர் யார்?
இராதா கிருஷ்ண அய்யர்.
26. இராமானுஜன் உயர்வுக்கு உரிய காலத்தில் உதவியவர்கள் யார்?
திவான் பகதூர் இராமச்சந்திர ராவ், சி.எல்.டி. கிரிபத், சென்னைப் பொறியியல் கல்லூரி, நாராயண அய்யர், துறைமுகக் கழகம், பி.வி. சேஷூ அய்யர்.
27. இராமானுஜனின் கணிதத் திறமையை உலகுக்கு அறியச் செய்ய உதவியவர் யார்?
சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், சென்னைத் துறைமுகத் தலைவர்.
28. இராமானுஜன் இலண்டனில் எந்தக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்?
டிரினிடி கல்லூரி.
29. சென்னைத் துறைமுகத் தலைவர் யார்?
சர். பிரான்சிஸ் ஸ்பிரிங். இவரே அவ்வலுவலகத்தில் இராமானுஜத்திற்கு வேலை தந்தவர்.
30. உடல் நலக் குறைவு காரணமாக இராமானுஜன் சென்னையிலிருந்து குடந்தை புறப்பட்டபோது இராதாகிருஷ்ணனிடம் கூறிய நெஞ்சை உருக்கும் சொற்கள் யாவை?
இராமானுஜன் இரு குறிப்புச் சுவடிகளை இராதாகிருஷ்ணனிடம் கொடுத்துக் கண்ணtர் மல்கக் கூறியதாவது: "நான் இறந்துவிட்டால் தயவு செய்து இந்தக் குறிப்புச் சுவடிகளைப் பேரா. சிங்காரவேலு முதலியாரிடமோ கிறித்துவக் கல்லூரி பேரா. எட்வர்ட் பி. ரோசிடமோ கொடுத்துவிடுங்கள்"
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார், இராமானுஜன், அய்யர், கல்லூரி, பேரா