கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
41. இலண்டனில் இராமானுஜன் செய்த பணி யாது?
அதிகக் காரணிகள் கொண்ட எண்கள் பற்றி ஆராய்ந்தார். இவை நீளமானதும் முக்கியமானதும் ஆகும்.
42. சுழி பற்றிய வரலாறு யாது?
%=1 என்பது உண்மையா என்பது இராமானுஜம் ஐயம். சிலர் சுழியைச் சுழியால் வகுத்தால் சுழியே கிடைக்கும் என்றனர். சிலர் 1 என்றனர். ஆனால் இந்தியக் கணித மேதை பாஸ்கரர் மட்டுமே, சுழியைச் சுழியால் வகுத்தால் கிடைப்பது முடிவிலி என்றார்.
43. இராமானுஜன் வாழ்வில் கனவின் சிறப்பென்ன?
அவர் கனவில் அற்புதமான கணக்குகள் தோன்றும். அவற்றிற்குரிய முடிபுகளைக் கனவிலேயே போட்டு விடுவார். எழுந்தபின் அவற்றைத்தம் கற்பலகையில் குறித்துக் கொள்வார்.
44. இராமானுஜன் கணித அறிவைத் தூண்டிய நூல் எது?
ஜி.எஸ். கார் எழுதிய கணிதமாகும்.இந்நூலில் 6000 தேற்றங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றை மாதிரிகளாகக் கொண்டு அவர் பல தேற்றங்களை உருவாக்கினார். அப்பொழுது அவருக்கு அகவை 15. இத்தேற்றங்கள் இன்றும் சிறப்புள்ளவை என்று கருதப்படுபவை.
45. கணித மேதை பித்தாகரசுக்கும் இவருக்குமுள்ள ஒற்றுமை யாது?
பித்தாகரசு தமக்குத் தோன்றும் கணித முடிவுகளைத் தரையில் எழுதி வைத்துப் பிறகு சோதித்துப் பார்ப்பார். அதே போல இராமனுஜன் தம் கணக்குகளைத் தரையிலும் கற்பலகையிலும் போட்டுப் பார்ப்பார்.
46. உணவு பரிமாறுபவரிடம் இராமானுஜம் போட்ட புதிர்க் கணக்கு யாது?
"ஒரு சதுர மேசையில் ஒரு பக்கத்திற்கு 4 பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். நீ எத்தனை பேருக்குப் பரிமாறுவாய்?" பரிமாறுபவர் உடன், "இது தெரியாதா?" 16 பேர்கள். இராமானுஜம். இல்லை 12 பேர்கள்தான்.
47. இராமானுஜனின் குடும்பத் தெய்வம் எது?
நாமகிரித் தாயார்.
48. இவரின் அளப்பரிய கணிதத் திறமைக்கு சான்று ஒன்று தருக.
லோன் என்பவரின் கோணஇயலை இராமானுஜம் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே முடித்துவிட்டார். இது இலண்டன் கணித ஆராய்ச்சியாளர் மகலனோபிசுக்கு ஒரு புதிராக இருந்தது.
49. இலண்டனில் இராமானுஜனைப் பார்த்த இந்திய நாளிதழ் ஆசிரியர் யார்? அவருக்கு இராமானுஜம் கொடுத்த சிற்றுண்டி என்ன?
இந்து நாளிதழ் ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார். இவர் இராமானுஜத்தைப் பார்த்த பொழுது, தாம் சுடச்சுடத் தயாரித்த வெண்பொங்கலை அளித்தார். கஸ்தூரிரங்க அய்யங்காரும் மிக்க ஆவலுடன் அதை உண்டு மகிழ்ந்தார்.
50. இராமானுஜனின் இயற்கைக் கணித அறிவை விளக்குக.
ஒரு சமயம் அவர் தம் நண்பர்களிடம், "வானில் கூட்டமாகப் பறந்து செல்லும் கொக்குகள் எவ்வாறு பறக்கின்றன?" என்று கேட்டார்.
அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இராமானுஜம் கூறிய பதில்: "வானில் கொக்குகளின் பறக்கும் போது முக்கோணத்தின் வெளி இரு பக்கங்களிலுள்ள இரு நேர்க்கோடுகளின் அமைப்பில் இருக்கும். இந்த இரண்டு வரிசைகளுக்கு இடைவெளி தொலைவானது. விரிகோணத்தில் 130°-140° அளவில் இருக்கும்." இது அவர்தம் வடிவ கணித இயல் அறிவைக் காட்டுகிறது. அச்சமயம் அங்குப் பறந்த கொக்குகளைப் பார்த்த பொழுது இராமானுஜன் கூறிய உண்மை புலப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ", கணித, இராமானுஜம், யாது, இராமானுஜன், பார்த்த, அவர்