கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
1. இராமானுஜனைச் சிறப்பிக்கும் அடைமொழி யாது?
எண்கணித ஏந்தல். எண்கணிதக் கொள்கைக்குச் சிறந் பங்களிப்புச் செய்தவர்.
2. இராமானுஜனின் செல்லப் பெயர் என்ன?
சின்னசாமி.
3. இராமானுஜன் பிறந்த ஆண்டு எது?
1887.
4. இவர்தம் பெற்றோர்கள் யார்?
தந்தை சீனுவாச அய்யங்கார், தாய் கோமளத்தம்மாள்.
5. இராமாஜனின் மனைவி யார்?
ஜானகியம்மாள். இவர் 1994இல் இயற்கை எய்தினார்.
6. குடந்தையில் இராமானுஜன் வாழ்ந்த வீடு எது?
சாரங்கபாணி பெருமாள் கோவில் கிழக்குச் சந்தித் தெருவில் 17ஆம் எண்ணுள்ள ஒரு சாதாரண ஒட்டுக் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
7. இராமானுஜனுடன் உடன்பிறந்தவர்கள் யார் யார்?
சகோதரர்கள் 4 பேர். சடகோபன், சேஷன், இலட்சுமி நரசிம்மன், திரு நாராயணன். சகோதரி அம்புஜவல்லி.
8. இராமனுஜனின் இயல்புகள் யாவை?
தனிமை, சிந்தனை, தெருக்கூத்திலும் பொம்மலாட்டத்திலும் ஆர்வம்.
9. தென்னாட்டுச் கேம்பிரிட்ஜ் என்று அப்பொழுது கருதப் பட்ட கல்லூரி எது?
அரசு கலைக் கல்லூரி, குடந்தை.
10. இராமானுஜனின் இரண்டாம் வயதில் ஏற்பட்ட பெரியம்மை நோயின் விளைவு யாது?
அது அவர்தம் தடுப்பாற்றலைக் குறைத்துவிட்டதால் அடிக்கடி நோய்களுக்கு ஆளானார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார்