கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
11. இராமானுஜன் தம் அரிச்சுவடிப் படிப்பை எப்பொழுது தொடங்கினார்?
எங்கு? 1882இல், காஞ்சிபுரத் திண்ணைப் பள்ளியில்.
12. இராமானுஜன் படித்த கல்வி நிலையங்கள் யாவை?
காங்கேயன் பள்ளி, நகர உயர்நிலைப் பள்ளி, குடந்தை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
13. இராமானுஜன் எந்த வயதில் முதன்முதல் உதவித் தொகை பெற்றார்? எதற்காக?
10ஆம் வயதில் பெற்றார். மாவட்டத் தொடக்கநிலைத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததற்காக.
14. இராமானுஜனைக் கடைசி வரை வாட்டிய இரு கொடுமைகள் யாவை?
வறுமை, உடல் நலக் குறைவு.
15. முக்கோணவியலில் அவர் செய்த சாதனை யாது?
தம் 13ஆம் வயதில் யூலரின் விரிவுகளைப் புதிய வடிவில் எழுதி வெற்றி கண்டார்.
16. மெட்ரிகுலேஷன் தேர்வில் எந்த ஆண்டு இராமானுஜன் வெற்றி பெற்றார்?
1903இல், அப்பொழுது அவருக்கு அகவை 16.
17. இராமானுஜன் கல்லூரியில் படித்த பாடங்கள் யாவை?
சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், உடற்கூறு நூல், உரோமானிய - கிரேக்கர் வரலாறு.
18. கல்லூரியில் எஃப்ஏ தேர்வில் ஏன் தோல்வியடைந்தார்?
கணிதத்தில் அதிகம் நாட்டம் செலுத்தியதால்.
19. கல்லூரியில் அவர் கணித ஆசிரியர் யார்?
பேரா. இராமானுஜாசாரியார்.
20. இராமானுஜன் காலத்தில் வாழ்ந்த மேனாட்டு அறிவியல் அறிஞர்கள் யார்?
ரூதர்போர்டு, ஐன்ஸ்டீன், போர், சாட்விக், பிளாங்க், டிராக், எய்சன்பர்க், பெர்மி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இராமானுஜன், கல்லூரியில், தேர்வில், வயதில், யாவை, பெற்றார்