கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
![Mathematician Ramanujan](images/mathematician_ramanujan.jpg)
61. தம் இல்லத்தில் இராமானுஜன் நிலையத்தை யார் எப்பொழுது ஏற்படுத்தினார்?
டாக்டர் அழகப்பா செட்டியார் புரசைவாக்கத்திலுள்ள இல்லத்தில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் நிறுவினார்.
62. தமிழ்நாட்டில் இராமானுஜன் நிறுவனம். எப்பொழுது நிறுவப்பட்டது?
1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
63. இராமனுஜன் கணிதக் கழகம் திருச்சியில் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1985இல் திருச்சியில் தொடங்கப்பட்டது.
64. இராமனுஜன் நூற்றாண்டு விழா எப்பொழுது கொண்டாடப் பட்டது?
22-12-1987 அன்று கொண்டாடப்பட்டது.
65. இராமனுஜனைப் பற்றி நேரு பெருமகனார் கூறிய புகழுரை யாது?
இந்தியாவைக் காணல் என்னும் தம் நூலில் இதைக் கூறியுள்ளார்: "கட்டுப்படுத்த முடியாத இயற்கையான நுண்ணறிவுப் பண்பைக் கொண்ட நீர்க்குமிழி போல இருந்தார் பேரா. ஜூலியன் ஹக்சிலி அவர்கள், இந்த நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை இராமானுஜன் என்று கூறியதை நான் நம்புகிறேன்"
66. இராமானுஜன் எந்த ஆண்டு இங்கிலாந்து அரசர் கழக உறுப்பினர் ஆனார்?
1918ஆம் ஆண்டில்.
67. இராமானுஜன் விருது வழங்குவது எந்த அமைப்பு?
இந்தியத் தேசிய அறிவியல் கழகம் வழங்குவது. இது 1968 நவம்பர் 16 இல் நோபல் பரிசு பெற்ற சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது.
68. இராமானுஜனிடம் குறிப்பிடத்தக்க குறிப்புச்சுவடிகள் எத்தனை இருந்தன?
மூன்று குறிப்புச் சுவடிகள் இருந்தன.
69. இராமானுஜனின் அரிய கருவூலங்கள் எவ்வாறு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன?
இவர் பயன்படுத்திய குறிப்புச் சுவடிகளில் சில மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்திலும் சென்னைப் பல்கலைக்கழத்திலும் அரிய கருவூலங்களாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
70. மைய அரசு இராமனுஜனை எவ்வாறு சிறப்பித்துள்ளது?
இவர்தம் 75ஆவது பிறந்த நாளை ஒட்டிப் பேராசிரியர் சீனுவாச இராமானுஜன் அஞ்சல் தலையை அவர் உருவப் படத்துடன் வெளியிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இராமானுஜன், எப்பொழுது, ஆண்டு