கணிதம் :: கணிதமேதை இராமானுஜன்
51. இராமானுஜன் கருதுகோள் சிறப்பு யாது?
இது இராமானுஜன் டோ சார்பின் அளவைப் பற்றியது. இக் கருதுகோளை நிறுவியதற்காக 1978 இல் பியரி டெலிக்னி என்பார் பீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். டோ என்பது கிரேக்க நெடுங்கணக்கில் 19ஆம் எழுத்துக்குறி (1994)
52. ரோஜர்-இராமானுஜன் முற்றொருமைகள் என்பதின் சிறப்பு என்ன?
இவ்விரண்டையும் பேரா. ஹார்டி இணைத்து இப்பெயரில் இலண்டனிலுள்ள எல்லாக் கணித மேதைகளுக்கும் நகல் எடுத்து அனுப்பினார். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் அறியாத நிலையில் ஒரே வழிமுறைகளை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக, இராமானுஜத்தின் முறைகள் சுருக்கமாகவும் விடை சரியாகவும் இருந்தன.
53. இராமானுஜனின் ஆராய்ச்சித் தாள்கள் எப்பொழுது எங்கு எவற்றில் வெளியிடப்பட்டன?
1914, 1915, 1916 ஆகிய மூன்று ஆண்டுகளில் இராமானுஜத்தின் 12 ஆராய்ச்சித் தாள்கள் இங்கிலாந்திலுள்ள பல்வேறு கணித இதழ்களில் வெளியாயின.
54. இராமானுஜனின் கண்டுபிடிப்புகள் எவ்விதழில் எப்பொழுது வெளியாயின?
இக்கண்டுபிடிப்புகளில் சில கேள்விகள் போன்று தொகுக்கப் பெற்று பி.வி. சேஷூ அய்யர் மூலமாக 1911இல் இந்தியக் கழக இதழில் வெளியாயின. இதே இதழில் அவர் சிறந்த கண்டுபிடிப்புகளான பெர்னவுலியின் எண்கள் 1911 டிசம்பர் இதழில் வெளியாயிற்று.
55. இராமானுஜனுக்கு பி.ஏ. பட்டம் வழங்கிச் சிறப்பித்த பல்கலைக்கழகம் எது?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். கணிதத் திறமை ஒன்றிற்காகவே இப்பட்டம் அளிக்கப்பட்டது.
56. இராமானுஜன் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மொத்தம் எத்தனை?
1914 - 1921 வரை 21 கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
57. இராமானுஜனுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் உள்ள ஒற்றுமை யாது?
இருவரும் தம் உள்ளுணர்வால் உயரிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினர்.
58. இராமாஜன் கணிதத் திறமை பற்றி நெவல் கருத்து யாது?
இவர் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு 28-1-1914 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிடுவதாவது: "இராமானுஜத்தின் கண்டுபிடிப்பு கணித உலகில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பெயர் கணித வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை."
59. சென்னைத் துறைமுகக் கழகத்தினர் இராமானுஜனை எவ்வாறு சிறப்பித்துள்ளனர்?
சென்னைத் துறைமுகத்திற்காகப் புதியதாக வாங்கப்பட்ட குடிநீர் வழங்கும் தண்ணிர்க்கப்பலுக்குக் கணிதமேதை சீனுவாச இராமானுஜன் எனப் பெயரிட்டுள்ளனர்.
60. கணித அறிஞர் இராமனுஜனைப் பற்றித் தமிழில் வெளி வந்துள்ள இரு சிறந்த நூல்கள் யாவை?
1. எண்கணித ஏந்தல் சீனிவாச இராமானுஜன், நல்லாமூர் கோவி பழநி,
2. கணிதமேதை இராமானுஜன், ரகமி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதமேதை இராமானுஜன் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இராமானுஜன், கணித, இதழில், வெளியாயின, இராமானுஜத்தின், யாது