கணிதம் :: கோணங்கள்
71. பரிமாற்றுக் கோணங்கள் யாவை?
ஒரினைக் கோணங்கள் சேர்ந்து ஒரு முழுச் சுற்றை உண்டாக்கினால், அவை பரிமாற்றுக் கோணங்கள். (360° அல்லது 2π ரேடியன்)
72. நிரப்புகோணங்கள் என்றால் என்ன?
ஒரு செங்கோணத்தை உண்டாக்கச் சேர்க்கப்படும் ஓரினை கோணங்கள். (90° அல்லது π/2 ரேடியன்கள்)
73. மிகை நிரப்புகோணங்கள் என்றால் என்ன?
ஓரிணைக் கோணங்கள் சேர்ந்து ஒரு நேர்க்கோட்டை உண்டாக்குதல். (180° அல்லது π ரேடியன்கள்)
74. வெளிக்கோணம் என்றால் என்ன?
உச்சிக்கு அப்பாலிருக்கும் ஒரு நேர் விளிம்பின்விரிவுக்கும் அவ்வுச்சியில் அடுத்த நேர்விளிம்பின் வெளிப் பக்கத்திற்கும் உள்ள தள உருவத்திற்கு வெளியே உண்டாகும் கோணம். ஓர் உச்சியிலுள்ள வெளிக்கோணம் அடுத்த இரு உச்சிகளின் உட்புறங்களிலுள்ள கோணங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம்.
75. எழுகோணம் என்றால் என்ன?
நேரான ஏழு பக்கங்களைக் கொண்ட தள உருவம். ஒழுங்கான எழுகோணம் சமமான ஏழு பக்கங்களையும் ஏழு சமகோணங்களையும் உடையது.
76. இரு பதின்முகப் பன்மக் கோணம் என்றால் என்ன?
சம முகங்களைக் கொண்ட பல கோணம். இது 20 அனைத்துச் சமமுகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு சமபக்க முக்கோணம்.
77. செங்கோணம் என்றால் என்ன?
90° கோணம் அல்லது π/2 ரேடியன்கள். ஒன்றுக்கு மற்றொன்று செங்குத்தாகவுள்ள இரு தளங்கள் அல்லது கோடுகளுக்கிடையே உள்ள கோணம். ஒரு சதுரத்தின் மூலை செங்கோணமே.
78. செங்கண் உருவம் என்றால் என்ன?
நேரான வடிவியல் கன உருவம். காட்டாக, கூம்பு, நேரான உருளை, கூம்பகம் அல்லது முப்பட்டகம் அடிக்குச் செங்கோணத்தில் அச்சைக் கொண்டிருக்கும்.
79. அறுகோணம் என்றால் என்ன?
ஆறு பக்கங்களைக் கொண்ட தள உருவம். இதில் எல்லாப் பக்கங்களும் (6) கோணங்களும் (6) சமம்.
80. அறுபன்மக் கோணம் என்றால் என்ன?
ஆறு முகங்களைக் கொண்ட பல கோணம். எ-டு. , கன சதுரம், சதுரச் செவ்வகம், சாய்சதுர கோணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கோணம், அல்லது, கோணங்கள், உருவம், கொண்ட, ரேடியன்கள், நேரான