கணிதம் :: கோணங்கள்
31. இரு வட்டங்களுக்கிடையே உள்ள கோணம் என்றால் என்ன?
இக்கோணம் இரு வட்டங்கள் வெட்டும் புள்ளியில் அவைகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடையே உள்ள கோணம் ஆகும்.
32. அனைத்துச் சமக் கோணம் என்றால் என்ன?
அனைத்து நிலைகளிலும் ஒன்றாக இருப்பது.
33. பண்பேற்றக் கோணம் என்றால் என்ன?
நிலையான ஊர்தி அதிர்வெண்ணின் கட்ட கோணத்தை மாற்றும் செலுத்து குறிகையுள்ள தொகுதி. அதாவது கட்டப்பண் பேற்றமும் அதிர்வெண் பண்பேற்றமும் ஆகும்.
34. எதிர்கோணம் என்றால் என்ன?
குறைகோணம். கதிரின் சுற்று, கடிகாரமுள்ளின் திசையில் இருப்பது.
35. பிடிப்புக் கோணம் என்றால் என்ன?
உலோகத்தை உருட்டும் பொழுது, ஒன்றுக்கு மற்றொன்று எதிராகஉள்ள இரு சுருள்களைச் சேர்க்கும் கோட்டிற்கும் சுருள் ஆரம் முதலில் உலோகத்தைத் தொடும் இடத்திற்கிடையே அளக்கப்படும் கோணம்.
36. ஏற்புக் கோணம் என்றால் என்ன?
இது ஒரு கிடைமட்டக்கோணம்.இதில் போதிய ஊடுருவலுக்காகச் சாளரத்தை ஒளிக் கதிர்கள் அடையும்.
37. முன்னேற்றக் கோணம் என்றால் என்ன?
1. 90க்கு மிகையாக உள்ள கோணம். இதனால் நீராவி
எந்திரப் பல்லிணையின் மையப் பிறழ் எறிவு, கிரங்குக்கு முன்னேறிய நிலையில் இருக்கும்.
2. மின்பொறிப்பற்று எந்திரத்தில் வெளிப்புற வெற்று மையத்திற்கும் பற்றும் தண்டிற்கும் இடையிலுள்ள கோணம். எரிபொருள் எரிவதை இது சீராக்கும்.
38. அணுகொளிகோணம் என்றால் என்ன?
வானூர்தியின் இறங்கும் பகுதியில் திட்டமான நிலையில் செங்குத்துத் தளத்திலுள்ள அனுகு வழியைக் காட்டும் ஒளி.
39. வருகோணம் என்றால் என்ன?
கீழ்நோக்கி வரும் அலையின் உயர்ச்சிக் கோணம்.
40. தாக்குகோணம் என்றால் என்ன?
காற்றிறக்கை நானுக்கும் காற்றுக்குச் சார்பாக அந்நாண் இயங்குந் திசைக்குமுள்ள குறுங்கோணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கோணம், என்ன, என்றால், உள்ள