கணிதம் :: கோணங்கள்
91. வடிவொத்த என்றால் என்ன?
அளவில் மாறுபட்டு வடிவத்தில் ஒன்றாக இருக்கும் இரண்டிற்கு மேற்பட்ட உருவங்களைக் குறிப்பது.
92. வடிவொத்த கோணங்கள் என்றால் என்ன?
ஒத்த கோண அளவுகள் சமமாகவும் ஒத்த பக்கங்கள் ஒரே வீதத்திலும் இருக்கும் முக்கோணங்கள்.
93. பல்கோணம் என்றால் என்ன?
பல நேர்ப் பக்கங்களால் எல்லைப்படுத்தப்படும் கன உருவம். ஓர் ஒழுங்கு பல்கோணத்தில் எல்லாப் பக்கங்களும் எல்லா உட்கோணங்களும் சமம். n பக்கங்கள் உள்ள ஒழுங்கான பல் கோணத்தில் வெளிக் கோணம் 360°/n.
94. பாஸ்கலின் முக்கோணம் என்றால் என்ன?
எண்களின் முக்கோண அடுக்கு. ஐந்து அடுக்குகள் கொண்டது. எ-டு. -
1
1 1
1 2 1
1 3 3 1
1 4 6 4 1 .
1 1
1 2 1
1 3 3 1
1 4 6 4 1 .
95. ஐங்கோணம் என்றால் என்ன?
நேரான ஐந்து பக்கங்களைக் கொண்ட தள உருவம். ஒழுங்கான ஐங்கோணத்தில் எல்லா ஐந்து பக்கங்களும் கோணங்களும் சமம். கோணங்களை எல்லாம் 108°.72° அளவுக்குச் சுழற்றி அதன்மேல் பொருத்தி, ஒர் ஒழுங்கான ஐங்கோணத்தை அமைக்கலாம் (2π/5 ரேடியன்கள்)
96. வட்ட கோணப் பகுதி (செக்டார்) என்றால் என்ன?
பரிதிக்கும் இரு ஆரங்களுக்குமிடையே அமையும் ஒரு வட்டத்தின் பகுதி. இதன் பரப்பு 1/2 r2θ. r - ஆரம். θ கோணம்.
97. வட்டத்துண்டு (செக்மண்ட்) என்றால் என்ன?
வட்டத்தை ஒரு நாண் இரு பகுதிகளாகப் பிரிக்கும். ஒவ்வொரு பகுதியும் வட்டத் துண்டாக அமையும்.
98. வட்டத்துண்டின் இரு வகைகள் யாவை?
பெருவட்டத் துண்டு, சிறுவட்டத் துண்டு.
99. நேர்வீழல் என்றால் என்ன?
ஒரு தளத்தில் கோளத்தின் வடிவியல் உருமாற்றம்.
100. கன உருவக் கோளம் என்றால் என்ன?
ஒரு கோணத்தின் முப்பரும ஒப்புரு அலகு ஸ்டிரேடியன்.
101. அதிபரவளைவுக் கோளம் என்றால் என்ன?
ஓர் அதிபரவளைவை அதன் ஒரு சமச்சீர் அச்சில் சுழற்ற உண்டாகும் பரப்பு. பரிமாற்று அச்சில் ஏற்படும் சுழற்சி. ஒரு தகடு அதிபரவளைவு கோணத்தைக் கொடுப்பது. குறுக்களவைச் சுற்றிய சுழற்சி, இரு தகடுகள் உள்ள அதிபரவளைவைக் கொடுப்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஐந்து