கணிதம் :: கோணங்கள்
51. உராய்வுக் கோணம் என்றால் என்ன?
இரு பொருள்களின் பரப்புகள் தொட்டுக் கொண் டிருக்கும்பொழுது, செங்குத்துக் கோட்டிற்கும் அவற்றிற் கிடையே உள்ள தொகுபயன் வினைத் திசைக்கும் நடுவே அமையும் கோணம். சார்பு நழுவலை ஒரு விசை உண்டாக்க முனையும் பொழுது ஏற்படுவது.
52. அடிக்கோணம் என்றால் என்ன?
கப்பல் சாய்வதால் உண்டாகும் கோணம்.
53. படுகோணம் என்றால் என்ன?
1. பார்வை அச்சுக்குச் சார்பாகக் காற்றிறக்கையால் அமையும் கோணம்.
2. படுகதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையிலுள்ள கோணம்.
54. சாய்கோணம் என்றால் என்ன?
தன்.அச்சுக்குச் சார்பாகத் திருகுமரையினால் உண்டாக்கப்படும் கோணம்.
55. பின்னணிக்கோணம் என்றால் என்ன?
மாறுதிசை மின்னோட்டச் சுற்றில் முழு மின்னோட்டத்திற்குப்பின் வீறுநிலைப் பகுதியின் வினை குறைவதால் உண்டாகும் கோணம்.
56. முன்னணிக்கோணம் என்றால் என்ன?
மாறுதிசை மின்னோட்டச் சுற்றில் முழு மின்னோட்டத்திற்கு முன் வீறுநிலைப் பகுதி மிகுவதால் உண்டாகும் கோணம்.
57. சிறுமத் திரிபுக் கோணம் என்றால் என்ன?
ஒரு முப்பட்டகத்தின் வழியாக ஒளிக்கதிர் செல்லும் பொழுது அதற்குரிய திரிபுக் கோணத்தின் மீக்குறை மதிப்பு.
58. கடிகோணம் என்றால் என்ன?
ஒரு சிதைக்குங் கருவியில் இரு அணுகுமுகப்புகளுக்கு இடையே ஏற்படும் சிறுமக்கோணம்.
59. புரியிடைக்கோணம் என்றால் என்ன?
இரு தளங்களுக்கிடையே உள்ள குறுங்கோணம்.
60. அழுத்தக் கோணம் என்றால் என்ன?
ஒரு பல்லிணையிலுள்ள பல்லின் பக்கத் தோற்றத்திற்கும் அதன் புரியிடைப் புள்ளியின் ஆரக்கோட்டிற்கும் இடையிலுள்ள கோணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கோணம், என்ன, என்றால், உண்டாகும்