கணிதம் :: கோணங்கள்
41. தாக்கும் குறிகாட்டுங் கோணம் என்றால் என்ன?
இது ஒரு கருவி காட்டும் கோணம் சார்புக் காற்றோட்டமுள்ள உண்மையான படுகோணத்தை அறிந்து, அதைக் குறியிட்ட முகப்பில் வலவருக்குக் காட்டும் கோணம். இது ஒரு குறிகாட்டும் விளக்கினால் தெரியும்.
42. தொடுகோணம் என்றால் என்ன?
1. ஒடும் பட்டையோடு ஒருகப்பியன் விளிம்புப் பகுதி தொடும் பொழுது ஏற்படுங் கோணம்.
2. ஒரு கொள்கலத்தின் சுவரைப் பிரிக்கும் இரு நீர்மங்களின் பரப்பினால் உண்டாகும் கோணம்.
43. வெட்டுங்கோணம் என்றால் என்ன?
கிடைமட்டத்திற்குக் கீழ் உண்டாகும் மிகப் பெருங் கோணம். இங்கு மறிப்பி, அதன் வெளிப்புறப் புள்ளியில் இருந்து பார்க்கும்பொழுது ஒளிமூலத்தைத் தெரியுமாறு செய்யும்.
44. விலக்கக் கோணம் என்றால் என்ன?
எதிர் மின்வாய்க் கதிர்க்குழாய் மின்னணுக்கற்றையின் கோணம்.
45. படுஉயர்கோணம் என்றால் என்ன?
கிடைமட்டத்தோடு அமையுங் கோணமிது. வானூர்தியின் முதுகுக்கோடு உடலின் அடியைச் சேர்க்கும் குறுக்குக் கோட்டினால் உண்டாவது.
46. விடுகோணம் என்றால் என்ன?
அலைவாங்கியிலிருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலின் பெரும் உமிழ்வின் உயர்ச்சி அல்லது ஏற்றக் கோணம்.
47. இடைக்கோணம் என்றால் என்ன?
ஒரிடத்தில் புவியின் அச்சுக்கும் காந்த அச்சுக்கும் இடையே உள்ள கோணம். இது புவியின் ஒவ்வோரிடத் திலும் கணக்கிடப்படுவது.
48. இறக்கக்கோணம் என்றால் என்ன?
வேறு பெயர் வீழ்கோணம். கிடைமட்டத்திற்குக் கீழ் அளக்கப்படும் செங்குத்துக் கோணம். உற்றுநோக்கிய புள்ளியை நில அளவையர் அளக்கும்பொழுது ஏற்படுவது.
49. திரிபுக்கோணம் என்றால் என்ன?
ஒரு முப்பட்டகத்தின் வழியாக ஒளி செல்லும் பொழுது, விடுகதிருக்கும் படுகதிருக்கும் இடையிலுள்ள கோணம்.
50. சாய்வுக் கோணம் என்றால் என்ன?
சரிவுக் கோணம். புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள கிடைத்தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கோணம், என்ன, என்றால்