கணிதம் :: கோணங்கள்
61. நேர்கோணம் என்றால் என்ன?
மிகைக்கோணம். தொடக்கப் பக்கத்திலிருந்து கதிரின் சுற்று, கடிகாரமுள்ளின் எதிர்த்திசையில் இருப்பது.
62. எறிகோணம் என்றால் என்ன?
வீழல் கோணம்.
63. பிரதிபலிப்புக் கோணம் என்றால் என்ன?
எதிரொளிப்புக் கோணம். பிரதிபலிக்கும் கதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையிலுள்ள கோணம்.
64. விலகுகோணம் என்றால் என்ன?
விலகு கதிருக்கும் செங்குத்துக் கோட்டிற்கும் இடையில் உள்ள கோணம்.
65. தணிவுக்கோணம் என்றால் என்ன?
ஒரு வெட்டும் கருவியின் பின் முகத்திற்கும் வெட்டப்படும் பொருளின் பரப்புக்கும் இடையிலுள்ள கோணம்.
66. தாங்குகோணம் என்றால் என்ன?
கிடைமட்டத்திற்குரிய மிகப் பெருங்கோணம். கருங்கல் குவியலின் சாய்ந்த பரப்பால் உண்டாவது.இது உராய்வுக் கோணம்.
67. உருள்கோணம் என்றால் என்ன?
இது ஒரு குறுங்கோனமே. இதன் வழியே வானூர்தி தன் நீள் அச்சில் சுழலும்.
68. சரிவுக் கோணம் என்றால் என்ன?
குவிந்துள்ள பாறையின் சரிவு.
69. நிறுத்தக் கோணம் என்றால் என்ன?
தாக்குகோணம். இது உயர்வரை உயர்த்துக் கெழுவோடு தொடர்புடையது.
70. வட்டப் பலகோணம் என்றால் என்ன?
ஆழிப் பல கோணம்.இதில் எல்லா உச்சிகளும் அமையும். ஒழுங்கான எல்லாப் பலகோணங்களும் வட்டமானவையே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கோணம், என்ன, என்றால்