கணிதம் :: கோணங்கள்
21. சாய் முக்கோணம் என்றால் என்ன?
செங்கோணத்தைக் கொள்ளாத ஒரு முக்கோணம்.
22. விரிகோணம் என்றால் என்ன?
செங்கோணத்தை விடப் பெரிய கோணம். 90° க்கு மேல் அல்லது π/2 ரேடியன். .
23. எண்கோணம் என்றால் என்ன?
8 நேரான பக்கங்களைக் கொண்ட உருவம். ஓர் ஒழுங்கான எண் பக்ககம் எட்டுச் சம பக்கங்களையும் எட்டுச் சமகோணங்களையும் கொண்டது.
24. அடுத்துள்ள கோணம் என்றால் என்ன?
ஒன்றுக்கு அடுத்ததாக அமையுங் கோணம்.
25. ஒன்றுவிட்ட (மாறு) கோணங்கள் என்றால் என்ன?
இரு இணைகோடுகளால் உண்டாகும் ஓரிணைச் சமகோணங்கள். காட்டாக, Z என்னும் எழுத்திலுள்ள இரு குறுங்கோணங்கள் ஒன்றுவிட்ட கோணங்களே.
26. திருகுகோணம் என்றால் என்ன?
ஒரு முறுக்கம் உண்டாகும் பொழுது, ஒரு தண்டின் ஒரு பகுதி அத்தண்டின் மற்றொரு பகுதிக்குச் சார்பாகத் திருகப்படுவதால் ஏற்படுங் கோணம்.
27. நிலைநிறுத்தியமைக்கும் கோணம் என்றால் என்ன?
வானூர்தியின் இறுக்கக்கோட்டிற்கும் நிலைப்பு நானுக்கும் இடையிலுள்ள குறுங்கோணம்.
28. மரைக்கோணம் என்றால் என்ன?
அச்சுத்தளத்தில் அளக்கப்பட்ட மரையின் இரு பக்கங்களுக்கு இடையே அமையும் கோணம்.
29. சிறகமைகோணம் என்றால் என்ன?
வானூர்தியின் இறுக்கக் கோட்டிற்கும் சிறகு நாணின் தளத்திற்கும் இடையிலுள்ள குறுங்கோணம்.
30. திரும்புகோணம் என்றால் என்ன?
ஒரு வானூர்தியின் சமச்சீர் தளத்திற்கும் சார்புக் காற்றுத் திசைக்கும் இடையிலுள்ள கோணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோணங்கள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், கோணம், இடையிலுள்ள, வானூர்தியின்