புவியியல் :: இந்தியா
1. அமைப்பு
1. இந்தியா எங்கு அமைந்துள்ளது?
நிலப் பகுதி மிகுந்த வடகோளப் பகுதியில் ஆசியா கண்டத்தின் தென் பகுதியில் இந்தியா அமைந்துள்ளது.
2. இந்தியாவின் பரப்பளவு என்ன?
3.2 மில்லியன் சதுரக் கிலோமீட்டர். உலகிலுள்ள நாடுகளில் பரப்பளவில் இந்தியா ஏழாவது நாடு.
3. சீனாவிற்கு அடுத்துள்ள பெரிய நாடு எது?
இந்தியா
4. இந்தியாவிலுள்ள சமயங்கள் யாவை?
இந்து மதம், புத்த மதம், சைன மதம், கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம்.
5. இந்தியாவின் எல்லைகள் யாவை?
வடக்கே இமயமலை, தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்காள விரிகுடா.
6. இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை?
பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்கம், பாமா, ஸ்ரீ லங்கா.
7. இந்திய ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது ஏன்?
இந்தியா இயற்கை அரண்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கையமைப்பு, கால நிலை, இயற்கைத் தாவரம், மக்கள் வாழ்க்கை ஆகியவற்றால் வேற்றுமைகளைக் ஒரு கண்டத்திற்கு ஒப்பாக விளங்குகிறது.
8. இந்தியாவிலுள்ள மாநிலங்கள் எத்தனை?
28 மாநிலங்கள்.
9. யூனியன் பிரதேசங்கள் யாவை?
1. அந்தமான் நிக்கோலார் தீவுகள் (போர்ட்பிளோ)
2. அருணாசலப்பிரதேசம் - (இடா நகர்)
3. தத்ரா, நாகர் ஹவேலி (சில்வாசா)
4. தில்லி (தில்லி)
5. கோவா, டையு, டாமன (பனாஜி)
6. இலட்சத் தீவு (கவரெட்டி)
7. சண்டிகர் (கண்டிகர்)
8. மிசோரம் (ஜஜால்)
9. பாண்டிச்சேரி (பாண்டிச்சேரி)
10. இந்தியாவின் புவியியல் பிரிவுகள் யாவை?
1. இமயமலைப் பிரதேசம்
2. சிந்து வடிநிலமும், கங்கை வடிநிலமும்
3. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
4.இராஜபுதன மேட்டுநிலமும் மைய இந்தியப் பீடபூமியும்.
5. கிழக்குக் கடற்கரைச் சமவெளி.
6. மேற்குக் கடற்கரைச் சமவெளி
7.தக்காணப் பீடபூமி
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இந்தியா, யாவை, இந்தியாவின், மதம்