புவியியல் :: இந்தியா

41. தக்காணப் பீடபூமி எங்குள்ளது?
இது தீபகற்ப இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் இடையிலுள்ளது. பழங்காலக் கடினப்பாறைகளாலான முக்கோண வடிவப் பீடபூமி.
42. இப்பீட பூமியில் உள்ள மாநிலங்கள் யாவை?
இதன் வடபகுதியில் மராட்டிய மாநிலமும். வடகிழக்குப் பகுதியில் சோட்டா நாகபுரி பீடபூமியும் உள்ளன. இதன் தெற்குப் பகுதியில் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
43. இப்பீடபூமியில் அமைந்துள்ள இரு மலைத் தொடர்கள் யாவை?
மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சிமலை.
44. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள உயரமான சிகரம் எது?
ஆனைமுடி இதன் உயரம் 2695 மீ.நீளம் 1600 மீ. அகலம் 1200 - 2440 மீ.
45. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள் யாவை?
தால்காட் போர்காட், தார்வார், பாலக்காடு.
46. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் எங்குச் சந்திக்கின்றன?
நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன.
47. இந்தியாவின் நான்கு காலநிலைப்பருவங்கள் யாவை?
1. கோடை: மார்ச் - மே,
2. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்: ஜூன் - செப்டம்பர்.
3. பின்னடையும் பருவக்காற்றுக்காலம்: அக்டோபர் - நவம்பர். .
4. குளிர்காலம்: டிசம்பர் - பிப்ரவரி.
48. இந்தியாவின் முக்கியத் தாவரங்கள் யாவை?
1. பசுமை மாறாக்காடுகள்
2. இலைஉதிர் காடுகள்
3. மிதவெப்பக் காடுகள்
4. வெப்பமண்டலப் புல்வெளிகள்
5. பாலைவனத் தாவரங்கள்.
49. இந்தியாவின் தனிச் சிறப்பு யாது?
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது.
50. இயற்கையமைப்பை ஒட்டி இந்தியாவை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
1. இமயமலைத் தொடர்கள்
2. வட இந்தியச் சமவெளிகள்
3. தக்காணப் பீடபூமி
4. கடற்கரைச் சமவெளிகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தொடர்ச்சி, யாவை, மேற்குத், இந்தியாவின், இதன், பீடபூமி, கிழக்குத்