புவியியல் :: இந்தியா
2. ஆறுகள்
51. இந்திய ஆறுகளின் இரு வகைகள் யாவை?
1. வட இந்திய ஆறுகள்
2. தென்னிந்திய ஆறுகள்
52. வட இந்திய ஆறுகள் யாவை?
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா.
53. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?
1. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் பருவக் காற்று மழையால் மட்டுமல்லாமல், கோடைக் காலத்தில் இமய மலையின் சிகரங்கள் பனி உருகுவதாலும் நீரைப் பெறுகின்றன.
2. வற்றாத ஆறுகள், ஆண்டு முழுதும் நீர்ப் பாசனம் நடைபெறும்.
3. அணைகள் கட்டி மின் உற்பத்தி செய்யவும் நீர்ப்பாசனம் செய்யவும் இந்த ஆறுகள் உதவுதல்.
4. உள்நாட்டு நீர்வழிகள்.
54. சிந்து ஆற்றின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 2,900 கி.மீ.
2. இமயமலையில் கைலாயமலையில் மானசரோவர் ஏரிக்கு அருகில் உற்பத்தியாகிறது.
3. காஷ்மீர் மாநிலத்தில் ஒடிப்பின், பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப், சிந்து மாநிலங்களில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
4. இதன் முக்கியக் கிளை ஆறுகளாவன: ஜீலம், சினா, இராவி, பியாஸ், சட்லெஜ்.
55. கங்கையின் சிறப்புகள் யாவை?
1. இதன் நீளம் 2,510 கி.மீ.
2. இமயமலையில் கங்கோத்ரி என்னும் இடத்தில் தோன்றுகிறது.
3. உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
4. இதன் கிளையாறுகள்: யமுனை, கோமதி, கோக்ரா, சாரதி, கண்டகி, கோசி, சம்பல், சோன்.
56. கங்கையின் இரு பிரிவுகள் யாவை?
பாகீரதி, பத்மா.
57. கங்கையின் கிளையாறுகளில் மிகச் சிறந்தது எது?
ஹூக்ளி.
58. பிரம்மபுத்திராவின் சிறப்பியல்புகள் என்ன?
1. இதன் நிலம் 2,800 கி.மீ.
2. இமயமலையில் கைலாய மலைக்கருகில் மானசரோவர் ஏரியில் தோன்றுகிறது.
3.1,280 கி.மீ வரை திபேத் வழியாகச் சாங்போ என்னும் பெயரில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
4. இது அஸ்ஸாம் மாநிலத்தில் பாய்ந்து கங்கையின் கிளையாறாகிய பத்மாவுடன் சேர்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.
59. தென்னிந்திய ஆறுகள் யாவை?
நர்மதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வட பெண்ணை.
60. தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள் யாவை?
பாலாறு, தென் பெண்ணை, வைகை, தாமிரபரணி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆறுகள், யாவை, இதன், கங்கையின், கலக்கிறது, பாய்ந்து, இமயமலையில், இந்திய, சிந்து