புவியியல் :: இந்தியா
231. ஒரு மணி நேரத்தில் காடுகள் எந்த அளவுக்கு அழிக்கப்படுகிறது?
ஒவ்வொரு மணி நேரத்தில் 24 சதுர மீட்டர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன.
232. இந்நிலை நீடித்தால் உண்டாகும் பெருந்தீமை யாது?
2050 க்குள் காடுகள் எல்லாம் அழியும்.
233. மழை எவ்வாறு அமிலமாகிறது?
மழை நீர் அனைத்தும் சிறிது காடித்தன்மை உள்ளது. தொல் படிவ எரிபொருள்களை எந்திரங்களில் எரிக்கும்பொழுது, வேதிப் பொருள்கள் உண்டாகின்றன. இவை காற்றிலுள்ள ஈரத்தை மேலும் காடித்தன்மை யுள்ளவை ஆக்கின்றன. இறுதியாக, இந்த ஈரம் காடிப்பொழிவாகத் தரையில் விழுகிறது.
234. உலகிலுள்ள உயிரினங்களின் (தாவரங்கள், விலங்குகள்) சிறப்பினங்கள் எவ்வளவு?
சுமார் 8 மில்லியன் சிறப்பினங்கள்.
235. இவற்றில் இனங் கண்டறியப்பட்டவை எத்தனை?
1.6 மில்லியன்.
236. அமெரிக்காவின் விந்தை என்ன?
உலக மக்கள் தொகையில் 5% அமெரிக்காவில் உள்ளது. ஆனால், உலகப் பெட்ரோலில் அவர்கள் பயன்படுத்துவது 29%.
237. நாம் கொட்டும் குப்பைகூளங்கள் எங்கே போகின்றன?
1. இவற்றில் சில எரிக்கப்டுகின்றன. இதனால் காற்று மாசடைந்து உலகம் வெப்பமடைதலை உயர்த்துகிறது.
2. பெரும்பான்மை தளைகளில் புதைக்கப்படுகின்றன. அல்லது கடலில் கொட்டப்படுகின்றன. இதனால் மாசடைதல் மேலும் அதிகமாகிறது.
3. சிறிதளவே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.கண்ணாடி, தாள், பிளாஸ்டிக்குகள் முதலியவை மீண்டும் பயன் படுத்துவதற்குரியவை.
238. உலகம் வெப்பமடைதல் என்றால் என்ன?
காற்றிலுள்ள சில வளிகள் (கரி இரு ஆக்சைடு) கதிரவனி டமிருந்து வெப்பத்தைப் பெற உதவுபவை. தொழிற் சாலைகள், உந்து வண்டிகள், ஆற்றல் நிலையங்கள் முதலியவை இவ்வளிகளை அதிகம் உண்டாக்குகின்றன. ஆகவே, அதிக வெப்பம் பெறப்படுகிறது. புவி வெப்பமடையுமானால், அண்டார்க்டிக் பனிக் கட்டி உருகத் தொடங்கும். இதனால் கடல் மட்டம் உயரும்; கடற்கரைகளில் வெள்ளம் ஏற்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இதனால், காடுகள்