புவியியல் :: இந்தியா

21. இந்தியாவிலேயே மிகச் செழிப்பான வடிநிலம் எது?
கங்கை வடிநிலம்.
22. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் எல்லை யாது?
இந்தியாவின் வடகிழக்குக் கோடியிலுள்ள இமயமலைப் பிரதேசத்திற்கும் அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, ஜெயந்தியாக் குன்றுகளுக்கும் இடையில் பிரம்மபுத்திரா உள்ளது.
23. இதிலுள்ள மாநிலங்கள் யாவை?
அஸ்ஸாம், மேகாலயா.
24. இராஜபுதன மேட்டுநிலத்தில் அமைந்துள்ள மாநிலம் யாது?
இராஜஸ்தான். இதன் மேற்குப் பகுதியில் தார் பாலை வனம் உள்ளது. இம்மாநிலம் மிக வறண்ட மாநிலம்.
25. மைய இந்தியப் பீடபூமியில் உள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதி. இதுவும் ஒரு வறண்ட மலைப்பிரதேசம்.
26. இமயமலைத் தொடர்களின் வகைகள் யாவை?
1. உள் இமய மலைத்தொடர்
2. மைய இமய மலைத்தொடர்
3. வெளி இமய மலைத்தொடர்.
27. வட இந்தியச் சமவெளிகள் யாவை?
இவை வடக்கே இமயமலைத் தொடர்களுக்கும் தெற்கே விந்திய மலைத் தொடர்களுக்கும் இடையில் உள்ளவை. இவற்றின் நீளம் 2,400 கி.மீ. அகலம் 150 - 320 கி.மீ. பரப்பு 400,000 ச. கி. மீ.
28. எந்த ஆறுகளால் இச்சமவெளி உருவாக்கப்பட்டது?
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் கிளையாறுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
29. இமயமலையிலுள்ள சிகரங்கள் யாவை?
எவரெஸ்ட், கஞ்சன் ஜங்கா, தவளகிரி, நந்ததேவி, நங்க பர்வதம்.
30. இமயமலைத் தொடர்களின் சிறப்புகள் என்ன?
1. இந்தியாவின் வடக்கு எல்லை.
2. இமயமலைகள் இந்தியாவை ஆசியாவின் பிற்பகுதிகளிலிருந்து பிரிக்கின்றன.
3. இம்மலைத் தொடரின் நீளம் 2,400 கி.மீ. அகலம் 160 - 450 கி.மீ.
4. இமயமலைகள் படிவுப் பாறைகளாலான மடிப்பு மலைகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, மலைத்தொடர், இமயமலைத், மாநிலம், பிரம்மபுத்திரா