புவியியல் :: இந்தியா

31. கடற்கறைச் சமவெளிகள் எங்குள்ளன?
தீபகற்ப இந்தியாவின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் உள்ளன.
32. அவை யாவை?
1. கிழக்குக் கடற்கரைச் சமவெளி
2. மேற்குக் கடற்கரைச் சமவெளி
33. கிழக்குக் கடற்கரைச் சமவெளி எங்குள்ளது?
கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையிலுள்ளது.
34. இது எதுவரை பரவியுள்ளது?
கங்கை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து கன்னியா குமரி வரை பரவியுள்ளது.
35. இதில் தோன்றும் ஆறுகள் யாவை?
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி.
36. கிழக்குக் கடற்கரைச் சமவெளி எங்குள்ளது?
இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையில் பரவியுள்ளது.
37. இதன் இரு பிரிவுகள் யாவை?
1. சோழ மண்டலக் கடற்கரை.
2. வட சர்க்கார் பிரதேசம்.
38. மேற்குக் கடற்கரைச் சமவெளி எங்குள்ளது?
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிலுள்ள குறுகிய சமவெளி. இங்குத் தென் மேற்குப் பருவக் காற்றால் அதிக மழை பெய்கிறது.
39. இதன் இரு பிரிவுகள் யாவை?
கொங்கணக்கடற்கரை, மலபார் கடற்கரை.
40. இச்சமவெளியின் சிறப்புகள் யாவை?
1. ஒரு குறுகிய நீண்ட சமவெளி
2. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்குச் சரிவில் உற்பத்தியாகும் ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன.
3. இந்த ஆறுகளின் நீளம் குறைவு, விரைவு அதிகம் எனவே, பல இடங்களில் நீர்மின் நிலையங்கள் உள்ளன.
4. இதன் வடகரை கொங்கணக்கரை, தென்பகுதி மலபார் கரை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சமவெளி, யாவை, கடற்கரைச், தொடர்ச்சி, இதன், பரவியுள்ளது, எங்குள்ளது, கிழக்குக், மலைகளுக்கும்