புவியியல் :: இந்தியா

221. நீர்வழிப் போக்குவரத்தின் இரு வகைகள் யாவை?
1. உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து - ஆறுகள் வழி.
2. கடல் வழிப் போக்குவரத்து - கப்பல் போக்குவரத்து.
222. இந்தியாவில் விமானப் போக்குவரத்து எப்பொழுது தொடங்கப்பட்டது?
1911இல் தொடங்கப்பட்டது.
223. இந்தியாவின் மூவகை விமான வழிகள் யாவை?
1. கண்டம் கடக்கும் பெருவழிகள்
2. பிரதேசப் பெருவழிகள்
3. உள்நாட்டு வழிகள்.
224. இந்தியாவின் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துபவை யாவை?
1. இந்தியன் ஏர்லைன்ஸ் - உள்நாட்டுப் போக்குவரத்து
2. ஏர் இந்தியா - வெளிநாட்டுப் போக்குவரத்து.
225. இந்தியாவிலுள்ள சுற்றுலா மையங்கள் எத்தனை?
100 மையங்கள்
226. இந்தியாவின் பரப்பளவு என்ன?
32,87,263 சதுர கி.மீ.
227. இந்திய மக்கள் தொகை என்ன?
1,027,015,247 (2001)
228. இந்தியத் தலைநகர் எது?
புதுதில்லி.
9. சூழ்நிலை கெடல்
229. மாசுபடுத்தல் என்றால் என்ன?
சூழ்நிலையைப் பாழ்படுத்தல் மாசுபடுத்தல் ஆகும். காற்றில் கரும்புகை கலத்தல், நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் சேர்தல், நிலத்தையும் தாவரங்களையும் அழித்துப் பல வகையில் பாழ்படுத்தல்.
230. எவ்வாறு நாம் பல வழிகளில் புவிக்குச் சேதம் விளைவிக்கிறோம்?
1. காற்று, எண்ணெய், நீர் ஆகியவற்றை மாசுபடுத்தல்.
2. காடுகளை அழித்தல், காட்டு விலங்குகளைக் கொல்லுதல்.
3. இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப்பயன்படுத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - போக்குவரத்து, மாசுபடுத்தல், என்ன, இந்தியாவின், யாவை