புவியியல் :: இந்தியா
61. நர்மதையின் சிறப்புகள் என்ன?
1. நீளம் 1,280 கி.மீ.
2. மைகால் மலைத் தொடரில் தோன்றுகிறது
3. விந்திய, சாத்பூரா மலைகளுக்கிடையில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளை குடாவில் கலக்கின்றது.
62. தபதியின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 640 கி.மீ.
2. மகாதேவ் குன்றுகளில் தோன்றுவது.
3. சாத்பூ மலைகளுக்குத் தெற்கில் மேற்குநோக்கிப் பாய்ந்து காம்பே வளைகுடாவில் கலக்கின்றது.
63. மகாநதியின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 880 கி.மீ.
2. மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஸ்தார் குன்றுகளில் தோன்றுவது.
3. ஒரிசா மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
4. இந்த ஆறு பாயும் சமவெளிக்கு சட்டிஸ்கர் சமவெளி என்று பெயர்.
64. கோதாவரியின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 1450 கி.மீ.
2. தென்னிந்திய ஆறுகளில் இதுவே நீளமானது.
3. இது தக்காணப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் உள்ள நாசிக்கின் அருகில் திரியம்பக் என்னுமிடத்தில் தோன்றுகிறது.
4. இது தென்கிழக்காக ஒடி மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.
5. இதன் முக்கியக் கிளையாறுகள் பென்கங்கா, பெயின்கங்கா, வார்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி.
65. கிருஷ்ணாவின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 1,290 கி.மீ.
2. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் மகாபலேஸ்வரத்திற்கு அருகில் தோன்றுவது.
3. கிழக்காக மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
4. இதன் கிளையாறுகள் துங்கபத்திரா, பீமா, வேணி, கடட்பிரபா, மலப்பிரபா, தண்டி, மூசி.
66. காவிரியின் சிறப்புகள் என்ன?
1. இதன் நீளம் 760 கி.மீ.
2. இது கர்நாடகத்தில் குடகு மலையில் மெர்க்காரவிற்கு அருகில் தலைக்காவிரி என்னுமிடத்தில் தோன்றுவது.
3. இது கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக ஒடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
4. இதன் முக்கியக் கிளையாறுகள் பவானி, நொய்யல், அமராவதி.
67. வடபெண்ணை எங்குத் தோன்றி எங்கு ஒடுகிறது?
மைசூர் பீடபூமியின் தோன்றி, ஆந்திர மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
68. வைகையாறு எங்குத் தோன்றுகிறது?
ஏலக்காய் மலையில் தோன்றித் தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து மன்னார் குடாவில் கலக்கின்றது.
69. தாமிரபரணி எங்குத் தோன்றுகிறது? எங்கு முடிகிறது?
மேற்குத் தொடர்ச்சி மலையில் அகத்திய மலையில் தோன்றி மன்னார் குடாவில் கலக்கிறது.
70. தாமிரபரணியின் கிளையாறுகள் யாவை?
மணிமுத்தாறு, சிற்றாறு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இதன், சிறப்புகள், பாய்ந்து, நீளம், என்ன, மலையில், கலக்கிறது, வங்காள, விரிகுடாவில், கிளையாறுகள், வழியாகப், தோன்றுகிறது, தோன்றுவது, கலக்கின்றது, எங்குத், தோன்றி, அருகில், குடாவில், ஆகிய, மாநிலங்கள்