சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 6
2 எருது போல் உன் ஆன்மீக எண்ணங்களில் அகந்தை கொள்ளாதே. ஏனென்றால், உன் வலிமை அறிவீனத்தால் சிதைந்து போகும்.
3 அகந்தை உன் நிலைகளைக் கெடுக்கும்@ உன் கனிகளை ஒழித்து விடும்@ நீ பாலைவனத்தில் நிற்கும் பட்ட மரத்தைப் போல விடப்படுவாய்.
4 ஏனென்றால், கெட்ட ஆன்மா எவனிடத்தில் இருக்கின்றதோ அது அவனைக் கெடுத்து, அவன் பகைவருக்கு மகிழ்ச்சியுண்டாக்க அவனைக் கையளித்து, அக்கிரமிகளின் நிலைக்கு அவனைக் கொண்டுபோம்.
5 இன்சொல் நண்பரைப் பெருகச் செய்யும்@ பகையாளிகளைச் சாந்தப்படுத்தும். இனிய சொல்லால் புண்ணியவானிடம் பல நலன்கள் உண்டாகும்.
6 பலர் உன் நண்பராய் இருக்கக் கடவார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் உன் ஆலோசனைக்காரனாய் இருக்கக்கடவான்.
7 உனக்கு நண்பன் வேண்டியிருக்கும் போது அவனை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள். எளிதாய் அவன் மீது நம்பிக்கை வைக்காதே.
8 ஏனென்றால், தன்னலத்தை நாடும் நண்பனும் உண்டு@ அவன் உன் துன்ப காலத்தில் நிலைத்திருக்க மாட்டான்.
9 பகைவனாய்த் திரும்பும் நண்பனும் உண்டு@ பகையும் சச்சரவும் நிந்தையும் காண்பிக்கும் நண்பனும் உண்டு.
10 பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நண்பனும் உண்டு. ஆனால், அவன் ஆபத்துக் காலத்தில் நிலைப்பவனல்லன்.
11 உறுதியாய் நிலைத்திருக்கும் நண்பனோ உன்னை ஒத்தவனாய் இருப்பான்@ உன் வீட்டில் உள்ளவர்களோடு விசுவாசமாய் நடந்து கொள்வான்.
12 அவன் உனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினாலும், உன் கண்முன் நின்று மறைந்தாலும் உன் நல்ல நட்பு மாறாமல் இருக்கக் கடவது.
13 பகைவர்களினின்றும் விலக உன் நண்பனுக்கு உன்னைக் கையளி.
14 நம்பிக்கையுள்ள நண்பன் பலமான காவலுக்குச் சமம்@ அவனைக் கண்டடைந்தவன் செல்வத்தைக் கண்டவன் போலாவான்.
15 நம்பிக்கையுள்ள நண்பனுக்கு ஒப்பு ஒன்றும் இல்லை@ அவனது நம்பிக்கைக்கு எந்த அளவு பொன்னும் வெள்ளியும் நிகராகா.
16 நம்பிக்கையுள்ள நண்பன் வாழ்வைத் தரும் மருந்து போல் இருக்கிறான். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் அவனைக் கண்டடைவார்கள்.
17 கடவுளுக்கு அஞ்சுகிறவன் நல்ல நண்பனை உரிமையாக்கிக் கொள்வான். ஏனென்றால், அவனைப் போலவே அவன் நண்பனும் இருப்பான்.
18 மகனே, வாலிப முதல் நற்போதனைகளைப் பின்பற்றி நட@ அப்போது முதுமை வரையிலும் ஞானத்தைக் காண்பாய்.
19 உழுது விதைப்பவன் (அறுவடைக் காலத்துப்) பலன்களுக்காகக் காத்திருப்பது போல, நீயும் ஞானத்தைப் பயிற்சி செய்து அதன் நற்கனிகளுக்காகக் காத்திரு.
20 அதைப் பயிரிடக் குறைந்த வேலை செய்வாய்@ அதன் கனிகளை வெகு விரைவில் உண்பாய்.
21 நல்லறிவில்லாத மனிதருக்கு ஞானம் எவ்வளவோ கசப்பாய் இருக்கிறது! அறிவீனன் அதன் மீது விருப்பம் கொள்ளான்.
22 இந்த ஞானம் அவனுக்கு மனிதர் பலத்தைச் சோதிக்கும் பாரமான கல் போலாகும். அவன் அதை எறிந்து விடத் தாமதியான்.
23 ஏனென்றால், ஞானம் தன் பெயருக்கு ஒத்ததாய் இருக்கின்றது@ அது பலருக்கு வெளிப்படுத்தப்படவில்லை@ தெரிவிக்கப்பட்டவர்களிடத்திலேயோ அவர்களைக் கடவுள் முன் சேர்க்கும் வரையிலும் நிலைத்திருக்கின்றது.
24 மகனே, கேள், அறிவுள்ள யோசனையை ஏற்றுக்கொள். என் யோசனையைத் தள்ளிவிடாதே.
25 அதன் விலங்குகளில் உன் கால்களையும், அதன் சங்கிலிகளில் உன் கழுத்தையும் மாட்டிக்கொள்.
26 குனிந்து, உன் தோளில் அதைச் சுமந்துகொள். அதன் கட்டுகளால் நீ சலிப்புக் கொள்ளாதே.
27 உன் முழு இதயத்தோடு அதை அணுகிப்போ. முழு ஆற்றலுடன் அதன் நெறிகளைக் காப்பாற்று.
28 அதைத் தேடினால் நீ கண்டடைவாய்@ அடைந்த பிறகு அதை விட்டு விடாதே.
29 ஏனென்றால், இறுதிக் காலத்தில் அதில் இளைப்பாற்றியைக் காண்பாய். உனக்கு அது மகிழ்ச்சியாக மாறும்.
30 அப்போது அதன் விலங்குகள் உன் பலத்திற்குக் காவலும், உன் ஆற்றலுக்கு அடித்தளமுமாய் இருக்கும். அதன் சங்கிலிகளோ மகிமையின் மேலாடை ஆகும்.
31 ஏனென்றால், வாழ்வின் அழகே அதில் உண்டு. அதன் விலங்குகள் குணப்படுத்தும் கட்டுகளாம்.
32 மகிமையின் மேலாடையால் அதைப் போர்த்துவாய்@ ஆனந்தத்தின் முடியாக உன் தலையில் தரித்துக் கொள்வாய்.
33 மகனே, நான் சொல்வதை நீ கவனிப்பாயாகில் கற்றறிந்து கொள்வாய்@ அதில் உன் மனத்தைச் செலுத்துவாயாகில் ஞானியாவாய்.
34 செவி கொடுப்பாயாகில் அறிவடைவாய்@ கேட்க விருப்பம் கொள்வாயாகில் ஞானியாவாய்.
35 ஞானமுள்ள முதியோருடைய சங்கத்தில் சேர்ந்து கொள். கடவுளைப்பற்றிய அனைத்தும் அறிய வேண்டி, அவர்கள் ஞானத்திற்கு மனம் கொண்டு ஒத்திரு. புகழ்ச்சிக்குரிய அவர்கள் உரையாடல் உன்னை விட்டு அகலாது.
36 அறிவாளியைக் கண்டால் அவனுடன் மிக விரைவில் பழகு. அவன் வாயிற் படிகளை உன் கால் மிதிக்கக்கடவது.
37 கடவுள் கட்டளைகளில் உன் எண்ணத்தைச் செலுத்தி, அவைகளில் வெகு கவனமாய் இரு. அவர் உனக்கு நன்மனத்தைக் கொடுப்பார். ஞானத்தின் ஆசையும் உனக்கு அளிக்கப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், நண்பனும், உனக்கு, அவனைக், ஏற்பாடு, பழைய, நண்பன், சீராக், நம்பிக்கையுள்ள, அதில், ஞானம், மகனே, உண்டு, காலத்தில், ஆகமம், விரைவில், திருவிவிலியம், வெகு, காண்பாய், அதைப், விருப்பம், முழு, மகிமையின், ஞானியாவாய், விலங்குகள், விட்டு, வரையிலும், கடவுள், அப்போது, உண்டு@, போல், அகந்தை, மீது, கனிகளை, கொள்ளாதே, அவனுக்கு, உன்னை, ஆன்மீக, ஆன்மிகம், நண்பனுக்கு, நல்ல, கொள்வான், இருக்கக்