சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 5
2 உன் வலிமையை நம்பி உன் இதயத்தின் தீய நாட்டங்களைப் பின்செல்லாதே.
3 நான் எவ்வளவோ வலிமை உள்ளவன்@ என் செயல்களைப் பற்றி என்னைக் கணக்குக் கேட்பவன் யார் என்று சொல்லாதே. ஏனென்றால், பழி வாங்கும் கடவுள் பழிவாங்குவார்.
4 பாவம் செய்தேன்@ அதனால் எனக்கு வந்த தீங்கு என்ன என்று சொல்லாதே. ஏனென்றால் உன்னத கடவுள் பொறுத்திருந்து தண்டிப்பார்.
5 பொறுக்கப்பட்ட பாவத்தைப் பற்றி அச்சமற்று இராதே. பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்ளாதே.
6 ஆண்டவருடைய இரக்கம் பெரிது@ என் கணக்கற்ற பாவங்கள் மீது அவர் இரங்குவார் என்று சொல்லாதே.
7 ஏனென்றால், இரக்கமும் கோபமும் அவரிடம் விரைவில் சேர்ந்து விடும். அப்பொழுது அவர் கோபம் பாவிகள் மீது விழும்.
8 மனந்திரும்பி ஆண்டவரிடம் சேரத் தாமதியாதே@ நாளுக்கு நாள் தாமதம் செய்யாதே.
9 ஏனென்றால், அவர் கோபம் திடீரென வரும்@ பழிவாங்கும் காலத்திலோ அவர் உன்னைச் சிதறடிப்பார்.
10 அநீதச் செல்வங்களைப் பற்றி ஏக்கம் கொள்ளாதே. ஏனென்றால், மரண நேரத்திலும் பழிவாங்கும் நாளிலும் அவைகளால் உனக்கு யாதொரு பயனும் உண்டாகாது.
11 காற்றடிக்கும் பக்கமெங்கும் திரும்பாதே. வழி போகும் இடங்களெல்லாம் செல்லாதே. ஏனென்றால், இவ்வண்ணமே வஞ்சக நாவினால் பாவி அறியப்படுகிறான்.
12 ஆண்டவருடைய வழியிலும், அறிவின் உண்மையிலும், கலையிலும் நிலையாய் இரு. அமைதியும் நீதியும் பொருந்திய வார்த்தை உன்னைப் பின்தொடரக்கடவது.
13 சொல்லுவதைக் கண்டுபிடிக்க வேண்டிச் சாந்த குணத்தோடு அதைக் கேள். அப்போது ஞானமுடன் உண்மையான மறுமொழி சொல்வாய்.
14 உனக்குத் தெரிந்திருக்குமாயின் பிறனுக்கு மறுமொழி சொல்@ இல்லாவிடில், தகாத காரியங்களைச் சொல்லி அகப்பட்டுக் கொண்டு வெட்கமடையாதபடிக்கு உன் வாயை மூடிக்கொள்.
15 அறிவாளியின் உறையாடலில் மரியாதையும் மகிமையும் உண்டு. விவேகமற்றவனின் நாவோ அவனுக்கே இடையூறாகின்றது.
16 புறங்கூறுபவன் என்று பெயர் எடுக்காதே. உன் வார்த்தையினால் அகப்பட்டுக் கொண்டு வெட்கமடையாதே.
17 ஏனென்றால், திருடன் மேல் வெட்கமும் அச்சமும் சார்கின்றன. வஞ்சக நாவுள்ளவன் மீதோ பெரிய அவமானம் சார்கிறது@ ஏனென்றால், புறங்கூறுகிறவன் மீது பகை, வர்மம், இகழ்ச்சி, உண்டாகின்றன.
18 சிறியவனுக்கும் பெரியவனுக்கும் நீ சரி நீதி செலுத்துவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், ஏற்பாடு, மீது, அவர், பழைய, ஆகமம், பழிவாங்கும், பற்றி, சொல்லாதே, சீராக், ஆண்டவருடைய, வஞ்சக, கொண்டு, அகப்பட்டுக், மறுமொழி, கொள்ளாதே, கோபம், உனக்கு, எனக்கு, ஆன்மிகம், திருவிவிலியம், உண்டு, நேரத்திலும், பாவம், கடவுள், மேல்