சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 50
2 கடவுளின் ஆலயத்தின் அடிப்படை அவரால் போடப்பட்டது. கடவுள் ஆலயத்தின் இரு பக்கத்துக் கட்டடங்களும், உயர்ந்த சுவர்களும் அவரால் கட்டப்பட்டன.
3 அவருடைய காலத்தில் தண்ணீர்க் கிணறுகள் கடலைப் போல் நிறைந்திருந்தன.
4 அவர் தம் மக்களைப் பாதுகாத்தார்@ அவர்களை அழிவினின்று காப்பாற்றினார்.
5 நகரத்தை விரிவுபடுத்துவதில் வல்லவரானார்@ மக்களிடம் பழகுவதில் மகிமை அடைந்தார்@ ஆலயத்தினுடையவும் மண்டபத்தினுடையவும் வழிகளை விரிவுபடுத்தினார்.
6 மேகத்தின் மத்தியில் விடிவெள்ளியைப் போலவும், காலத்தோடு வரும் முழு நிலவைப் போலவும் அவர் ஒளிர்ந்தார்.
7 மிகுந்த ஒளி வீசும் கதிரவனைப் போலக் கடவுளுடைய ஆலயத்தில் ஒளி வீசினார்.
8 மகிமையின் மேகங்களில் ஒளிரும் வில்லைப் போலவும், இளவேனிற் காலத்தில் ரோசாப் பூவைப் போலவும், தண்ணீர் ஓரத்தில் இருக்கும் லீலியைப் போலவும், கோடைக் காலத்தில் நறுமணம் தரும் தூபத்தைப் போலவும்,
9 சுவாலை விடும் நெருப்பைப் போலவும், நெருப்பில் எரியும் சாம்பிராணியைப் போலவும்,
10 கெட்டியாய்ச் செய்யப்பட்டு எல்லாவித விலையுயர்ந்த கற்களால் அணி செய்யப்பட்ட பொற்பாத்திரத்தைப் போலவும்,
11 தளிர் விடும் ஒலிவ மரத்தைப் போலவும், உயரமாய் வளர்ந்திருக்கும் சிப்பிரேசைப் போலவும் அவர் மகிமையின் மேலாடையைத் தரித்துத் தமது மேலான பதவியின் அணிகலன்களை அணிந்து காணப்பட்டார்.
12 அவர் புனித பீடத்தில் ஏறும் போது தமது புனித பணியின் உடைக்கு மகிமை தந்தார்@
13 பீடத்தின் பக்கத்தில் நின்று கொண்டு, குருக்கள் கையினின்று பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் நின்றது சகோதரருடைய மகுடத்தைப் போலும், அவரைச் சுற்றி அவர் சகோதரர் நின்றது லீபான் மலையில் கேதுரு மரங்களை நட்டது போலும் இருந்தது.
14 இவ்வண்ணமே, ஆரோனின் மக்கள் எல்லாரும் தங்கள் மகிமையில் பனையின் கிளைகளைப் போல் அவரைச் சுற்றி நின்றார்கள்.
15 இஸ்ராயேல் சபைக்கு முன்பாக ஆண்டவருடைய காணிக்கை அவர்களுடைய கையால் கொடுக்கப்பட்டது. பீடத்தில் பலியை முடிவுபெறச் செய்வதும், உன்னத அரசருடைய காணிக்கையை அதிகரிப்பதும் அவருடைய பணியாக இருந்தன.
16 அவர் பானப் பலியில் தம் கையை நீட்டிக் கொடிமுந்திரிப் பழச்சாற்றை ஒப்புக்கொடுத்தார்.
17 உன்னத கடவுளுக்குப் பீடத்தின் அடியில் தெய்வீக வாசனையைச் சிந்தினார்.
18 அப்போது ஆரோன் மக்கள் பேரொலியிட்டு, வெள்ளியினால் செய்யப்பட்ட எக்காளங்களை ஊதினார்கள்@ கடவுளுடைய முன்னிலையில் நினைவில் நிலைக்கும்படி பெரும் சத்தமிட்டார்கள்.
19 அப்போது எல்லா மக்களும் விரைவில் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆண்டவரான கடவுளை ஆராதிக்கவும், மேலான எல்லா வல்லமையுமுள்ள கடவுளை மன்றாடவும் பூமியில் முகங்குப்புற விழுந்தார்கள்.
20 பாடகர்கள் தங்கள் குரலொலியை உயர்த்தினார்கள்@ கடவுளின் பெரிய ஆலயத்தில் இனிதான சத்தம் அதிகப்பட்டு நின்றது.
21 ஆண்டவருடைய மகிமை நிறைவாகிற வரைக்கும், தங்களுடைய காணிக்கையை நிறைவேற்றுகிற வரைக்கும் மக்கள் செபங்களில் உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள்.
22 அப்போது அவர் ( சீமோன் ) இறங்கி வந்து, கடவுளுக்குத் தம் உதடுகளால் மகிமை கொடுப்பதற்கும், அவர் பெயரால் தாம் மகிமைப்படுத்தப்படவும், இஸ்ராயேல் மக்களுடைய சபை முழுவதன் மேல் தம் கைகளை விரித்தார்.
23 கடவுளுடைய வலிமையைக் காட்டவேண்டி, வேண்டுதலைத் திரும்பவும் செய்தார்.
24 பூமியெங்கும் மகத்தான காரியங்களைச் செய்து, நம் தாயின் வயிற்றினின்று நம் நாட்களை அதிகரித்து, தமது இரக்கத்தின்படியே நம்மை நடத்தின எல்லாம் வல்ல கடவுளை நோக்கி இப்போது மன்றாடுங்கள்.
25 இதய மகிழ்ச்சியை அவர் நமக்குக் கொடுப்பாராக@ நமது காலத்தில் இஸ்ராயேலில் என்றென்றைக்கும் சமாதானம் இருக்கும்படி செய்வாராக.
26 நம்முடைய நாட்களில் நம்மைக் காப்பாற்றக் கடவுளின் இரக்கம் நம்முடன் இருக்கிறது என்று இஸ்ராயேல் விசுவசிக்கும்படி செய்வாராக.
27 இருவிதக் குடிகளை என் ஆன்மா பகைக்கின்றது@ நான் பகைத்த மூன்றாம் விதக் குடியோ குடியன்று.
28 அவர்கள் யாரென்றால், செயீர் மலையில் இருக்கிறவர்களும், பிலிஸ்தியரும், சிக்கேமில் வாழும் மூடத்தனமுள்ள மக்களுமாம்.
29 தம் இதயத்தில் ஞானத்தைப் புதுப்பித்த யெருசலேம் வாசியான சீராக் மகன் இயேசு இந்நூலில் ஞானத்தினுடையவும் நன்னெறியினுடையவும் போதகத்தை எழுதினார்.
30 இந்த நற்போதகங்களைக் கடைப்பிடிப்பவன் பேறு பெற்றவன். தன் இதயத்தில் அவைகளைக் காப்பாற்றுகிறவன் எப்போதைக்கும் ஞானியாய் இருப்பான்.
31 ஏனென்றால், அவன் அவைகளைச் செய்தால் அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவன் ஆவான். ஏனென்றால், கடவுளுடைய ஒளியே அவன் குறிப்பு அடையாளமாய் இருக்கின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர், போலவும், ஏற்பாடு, தமது, காலத்தில், கடவுளின், சீராக், மகிமை, கடவுளுடைய, பழைய, அப்போது, கடவுளை, தங்கள், புனித, ஆகமம், நின்றது, மக்கள், இஸ்ராயேல், உன்னத, ஆண்டவருடைய, மலையில், எல்லா, ஏனென்றால், அவன், இதயத்தில், செய்வாராக, சுற்றி, வரைக்கும், காணிக்கையை, விடும், ஆலயத்தின், அவரால், அவருடைய, நாட்களில், சீமோன், திருவிவிலியம், ஆன்மிகம், போல், ஆலயத்தில், பீடத்தின், போலும், பீடத்தில், மேலான, மகிமையின், செய்யப்பட்ட, அவரைச்