சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 7
2 தீநெறியாளனை விட்டு அகன்று போ@ தீமையும் உன்னை விட்டு அகன்று போகும்.
3 மகனே, தீநெறியில் புகுந்து தீமைகளை விதைக்காதே@ ஏனென்றால், விதைத்ததை விட ஏழு மடங்கு தீமை அறுப்பாய்.
4 ஆண்டவரிடத்தில் உயர்ந்த நிலையைக் கேட்காதே. அரசனிடத்தில் மகிமையின் அரியணையைத் தேடாதே.
5 ஆண்டவர் முன்பாக நீ நீதிமானாகமாட்டாய்@ ஏனென்றால், அவர் உன் மனத்தை அறிவார். அரசனிடத்தில் ஞானியாய்த் தோன்ற மனம் கொள்ளாதே.
6 அக்கிரமங்களை உன் ஆற்றலால் ஒழிக்க வல்லவனாய் இருந்தாலன்றி நீதிபதியாவதற்குத் தேடாதே. ஏனென்றால், சில வேளை வலியவன் முன் அஞ்சி உன் நேர்மைக்கு இடையூறு உண்டாக்குவாய்.
7 ஊரார் எல்லாரையும் பகைக்காதே. மக்கட் கூட்டத்தில் சேர்ந்துகொள்ளாதே.
8 குற்றத்திற்கு மேலே குற்றம் செய்யாதே@ ஏனென்றால், தண்டனைகளுக்கு ஆளாக்க ஒரு குற்றமே போதுமானது.
9 உன் மனத்தில் கோழையாய் இராதே.
10 செபிப்பதையும் பிச்சையிடுவதையும் அசட்டை செய்யாதே.
11 நான் பலதடவை பிச்சையிட்டிருக்கிறதைக் கடவுள் கடைக்கண் நோக்கி, நான் அவருக்குக் கொடுக்கும் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்று சொல்லாதே.
12 யாரேனும் துன்பப்படுகையில் அவனைக் கேலி செய்யாதே@ ஏனென்றால், தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமாய் எல்லாவற்றையும் பார்க்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார்.
13 உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பொய்யான காரியங்களை ஏற்பாடு செய்யாதே@ அவ்வண்ணமே உன் நண்பனுக்கு விரோதமாகவும் செய்யாதே.
14 எந்தப் பொய்யும் சொல்லாதே@ அப்படிச் சொல்வது நல்ல வழக்கமன்று.
15 முதியோருடைய சபையில் விரிவாய்ப் பேசாதே. உன் செபத்தில் வார்த்தைகளை இரட்டித்துச் சொல்லாதே.
16 கடினமான வேலைகளை வெறுக்காதே. கடவுளால் ஏற்பட்ட பயிர்த் தொழிலைக் கைவிடாதே.
17 தீநெறியாளர் கூட்டத்தில் நீயும் ஒருவனாய் இராதே.
18 தெய்வ கோபம் வரத் தாமதியாது என்று எண்ணிக்கொள்.
19 உன் மனத்தை மிகவும் தாழ்த்து@ ஏனென்றால் தீநெறியாளனுடைய தண்டனை நெருப்பும் புழுக்களுமே.
20 பணம் கொடுக்கத் தாமதிப்பதனால் உன் நண்பன் மீது கொண்ட நம்பிக்கையைக் கைவிடாதே. பொன்னைப் பற்றி உன் அன்புச் சகோதரனை நிந்தியாதே.
21 தெய்வ பயத்தோடு நீ ஏற்றுக் கொண்ட அறிவுள்ள பெண்ணை விட்டுப் போகாதே@ ஏனென்றால், அவளது நாணத்தின் அலங்காரமே பொன்னுக்கு மேலானதாம்.
22 நம்பிக்கையாய் வேலை செய்யும் ஊழியனையும், தன்னை முழுமையும் நேர்ந்து பணிவிடை செய்யும் ஊழியனையும் துன்புறுத்தாதே.
23 அறிவாளியான ஊழியனை உன் ஆன்மாவைப் போல நேசிப்பாயாக. அவன் உரிமையை அவனிடமிருந்து பறிக்காதே@ அவனை வறுமையில் விட்டு விடாதே.
24 உனக்கு மந்தைகள் உண்டோ? அவற்றைப் பராமரித்துக் கொள். உனக்கு உதவியானால் அவை உன்னுடன் இருக்கட்டும்.
25 உனக்குப் புதல்வர் உண்டோ? அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்து, இளமையிலேயே அவர்களைப் பழக்கு.
26 உனக்குப் புதல்வியர் உண்டோ? அவர்கள் கற்பைக் காப்பாற்று@ அவர்களுக்கு மகிழ்ச்சி முகம் காண்பியாதே.
27 உன் புதல்வியைத் திருமணம் செய்து கொடு@ அப்பொழுது பெரிதான காரியத்தை முடித்தவனாவாய். அறிவாளியான மனிதனுக்கு அவளைக் கொடு.
28 உன் மனத்துக்கு இசைந்த பெண்ணாய் இருப்பாளேயாகில் அவளைக் கைவிடாதே. தீநெறியுடையவளிடத்தில் உன்னைக் கையளிக்காதே.
29 உன் முழு இதயத்தோடு உன் தந்தைக்கு மரியாதை செய்@ உன் தாயின் புலம்பல்களை நீ மறவாதே.
30 அவர்களின்றி நீ பிறந்திருக்கமாட்டாய் என்று நினைத்துக் கொள். அவர்கள் உனக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் நீ பதில் நன்றி செய்.
31 உன் முழு ஆன்மாவோடு ஆண்டவருக்கு அஞ்சி நட@ அவருடைய குருக்களுக்கு மரியாதை செய்.
32 உன்னைப் படைத்தவரை உன்னால் ஆனமட்டும் நேசிக்கக்கடவாய்@ அவருடைய பணியாளர்களையும் கைவிடாதே.
33 உன் முழு ஆன்மாவோடு கடவுளை வணங்கு. குருக்களுக்கு மரியாதை செய்து, உன் சொந்தக் காணிக்கைகளைக் கொண்டு உன்னைத் தானே தூய்மைப் படுத்திக்கொள்.
34 உன் முதற் பலன்களிலும் காணிக்கைகளிலும் அவர்களுக்கு உண்டான பங்கை, உனக்குக் கட்டளையிடப் பட்டுள்ள வண்ணம் கொடுத்து விடு. உன் குற்றங்களைச் சிலர் முன்னிலையில் நிவர்த்தி செய்துகொள்.
35 பலி மிருகங்களில் தோல்களையும், ஆராதனைப் பலியையும், முதற் காணிக்கைகளையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடு.
36 உன் பலியும் காணிக்கையும் முழு நிறைவு பெற வறியவருக்குப் பிச்சையிடு.
37 தாராள குணம் வாழ்வோரால் விரும்பப்படுகின்றது. இறந்தோருக்கும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியைத் தடை செய்யாதே.
38 அழுவோர்க்கு ஆறுதல் சொல்லத் தவறாதே. புலம்புகிறவர்களோடு நீயும் கூடப் புலம்பு.
39 நோயாளியைச் சந்திப்பதை அசட்டை செய்யாதே. ஏனென்றால், இத்தகைய செயல்களால் தான் நீ பிறர் அன்பில் உறுதிப்படுவாய்.
40 உன் எல்லாச் செயல்களிலும் உன் இறுதிக் கதியை நினைத்துக் கொள்@ ஒருபோதும் பாவம் செய்ய மாட்டாய்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனென்றால், ஏற்பாடு, முழு, செய்யாதே, செய்யாதே@, கைவிடாதே, பழைய, உண்டோ, சீராக், விட்டு, மரியாதை, ஆகமம், கொடுத்து, அறிவாளியான, உனக்கு, அவர்களுக்கு, கொள், உனக்குப், நினைத்துக், அவருடைய, குருக்களுக்கு, முதற், ஆண்டவருக்கு, ஆன்மாவோடு, அவளைக், ஊழியனையும், செய், செய்து, சொல்லாதே, அரசனிடத்தில், தேடாதே, அவர், அகன்று, உன்னை, திருவிவிலியம், ஆன்மிகம், தீமை, மனத்தை, அஞ்சி, நீயும், தெய்வ, கொண்ட, கடவுள், நான், கூட்டத்தில், இராதே, அசட்டை, செய்யும்