சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 4
2 பசியினால் வருந்துகிறவனைப் பழியாதே. வறியவனை அவனது வறுமையில் புறக்கணியாதே.
3 வறியவனுடைய மனத்தை நோகச் செய்யாதே. வருந்துகிறவனுக்குக் கொடுக்கத் தாமதியாதே.
4 துன்பப்படுகிறவனுடைய மன்றாட்டைத் தள்ளி விடாதே. எளியவனினின்று உன் முகத்தைத் திருப்பாதே.
5 எளியவனுக்கு உன்மீது வருத்தம் உண்டாகாதபடி அவனிடத்தினின்று உன் கண்களை அகற்றாதே. உன்னை மன்றாடுகிறவர்கள் உன் கண் மறைவில் உன்னைச் சபிக்கும்படி விடாதே.
6 மனத்தாங்கலால் உன்னைச் சபிக்கிறவனுடைய மன்றாட்டு கேட்கப்படும். ஏனென்றால் அவனைப் படைத்தவர் அவன் வேண்டுதலைக் கேட்பார்.
7 எல்லா ஏழைகள் மீதும் அன்பாய் நடந்து கொள். முதியோருக்கு உன் மனத்தைத் தாழ்த்தி, பெரியோருக்குத் தலை வணங்கு.
8 மகிழ்ச்சியோடு எளியவனின் மன்றாட்டுக்குச் செவி கொடு. நீ கொடுக்க வேண்டியதை அவனுக்குக் கொடு@ சாந்த குணத்தோடு அவனுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்.
9 வருந்தும் எளியவனை அகந்தை கொண்டவனுடைய கையினின்று விடுதலை செய். மனவருத்தம் கொண்டு பின்வாங்காதே.
10 தந்தையற்ற பிள்ளைகளுக்கு நீதி செலுத்துகையில் தந்தையைப் போல் இரக்கம் காண்பித்து, அவர்கள் தாயை ஆதரிப்பவன் போல் இரு.
11 அப்பொழுது, மேலான கடவுளுக்கு நீயும் கீழ்படிதலுள்ள மகனைப் போல் இருப்பாய்@ அவரும் தாயை விட அதிகமாய் உன் மீது இரக்கம் கொள்வார்.
12 ஞானம் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு உயர்வுள்ள வாழ்வைத் தருகின்றது@ தன்னைத் தேடுகிறவர்களை ஏற்றுக் கொண்டு, நீதிநெறியில் முன் செல்கின்றது.
13 அதை நேசிக்கிறவன் வாழ்வை நேசிக்கிறான்@ அதை அடையக் கவலை கொள்கிறவர்கள் அதன் சமாதானத்தைக் கைக்கொள்வார்கள்.
14 ஞானத்தைக் கைப்பற்றினவர்கள் வாழ்வை அடைவார்கள். அது புகுந்த இடமெல்லாம் கடவுள் ஆசீர்வதிப்பார்.
15 அதற்கு ஊழியம் செய்கிறவர்கள் புனிதருக்கு ஊழியம் செய்கிறவர்கள் ஆவார்கள். அதை நேசிப்பவர்களைக் கடவுள் நேசிக்கிறார்.
16 அதற்குச் செவி கொடுக்கிறவன் மனிதருக்கு நியாயம் தீர்க்க வல்லவன் ஆகிறான். அதைப் பார்க்கிறவன் நம்பிக்கையைக் கைவிடான்.
17 அதன் மீது நம்பிக்கை வைக்கிறவன் அதைத் தன் உரிமையாக அடைவான். அவன் சந்ததியாரும் அதில் நிலை கொள்வார்கள்.
18 ஏனென்றால், அது துன்ப நேரத்தில் அவனோடு உலாவுகின்றது@ அவனை ஆதியில் தேர்ந்து கொள்கின்றது.
19 பயத்தையும் அச்சத்தையும் சோதனையையும் அவன்மீது ஏவுகின்றது@ அவன் எண்ணங்களால் அவனைச் சோதித்து, அவன் தன் ஆன்மாவில் நம்பிக்கை கொள்ளும் வரையிலும் தன் போதனையினால் உண்டாகும் துன்பத்தில் அவனை வருத்துகின்றது@
20 அவனை உறுதிப் படுத்தி அவனிடம் நேர்வழி சென்று அவனை மகிழ்விக்கும்@
21 அவன் இரகசியங்களை அவனுக்கு வெளியாக்கி, கலையையும் நீதியின் அறிவையும் அவனிடம் சேர்ப்பிக்கும்@
22 அவன் தவறினானாயின், அவனை விட்டகன்று, பகைவன் கையில் அவனைக் காட்டிவிடும்.
23 மகனே, காலம் அறிந்து தீமையை விலக்கு.
24 உன் உயிரை இழப்பதானாலும் உண்மையைச் சொல்ல நாணாதே.
25 பாவத்திற்குக் கூட்டிப்போகும் வழி ஒன்று@ மகிமைக்கும் கடவுள் அருளுக்கும் அழைத்துப் போகும் வழி வேறொன்று.
26 உன் இதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக் கொள்ளாதே. உன் ஆன்மாவிற்கு இடையூறான பொய்யைச் சொல்லாதே.
27 அயலானை அவன் தன் குற்றத்தில் மதிக்காதே.
28 நன்மை செய்யக்கூடுமான போது பேசாதிராதே@ உன் ஞானத்தை அதன் நற்குணத்தில் மறைக்காதே.
29 ஞானம் நாவைக்கொண்டு அறியப்படுகின்றது. அறிவு, கலை, நல்லொழுக்கம் அறிவாளியின் வார்த்தைகளால் விளங்குகின்றன. ஆனால், அதன் நிலைமையோ நீதியின் செயல்களில் அடங்கியிருக்கின்றது.
30 உண்மையான வார்த்தையை ஒரு போதும் மறக்காதே. உன் அறிவீனத்தால் வந்த பொய்க்காக வெட்கப்படு.
31 உன் குற்றங்களை ஏற்றுக் கொள்ள நாணாதே. ஆனால், உன் குற்றத்தை முன்னிட்டு எல்லார்க்கும் முன்பாகவுமே உன்னைத் தாழ்த்திக் கொள்ளாதே.
32 வலியவன் முன்பாக எதிர்த்து நில்லாதே. ஆற்று நீரின் வேகத்தை எதிர்க்க முயலாதே.
33 உன் ஆன்மாவை முன்னிட்டு நீதிக்காகத் துன்பப்படு. சாகும் வரையிலும் நீதிக்காகப் போராடு. கடவுளும் உனக்காக உன் பகைவர்களை எதிர்த்து வெல்லுவார்.
34 பேசுவதில் துரிதப்படாதே. உன் செயல்களில் வீணனாகவும் சோம்பேறியாகவும் இராதே.
35 உன் வீட்டில் உன் வேலைக்காரரை அலைக்கழித்து, உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் துன்புறுத்திச் சிங்கத்தை போல் இராதே.
36 உன் கை வாங்குவதற்கு மட்டும் விரிந்தும், கொடுப்பதற்கோ மூடியும் இராதிருக்கக் கடவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், அவனை, ஏற்பாடு, பழைய, போல், கொள்ளாதே, சீராக், கடவுள், ஆகமம், ஏற்றுக், நம்பிக்கை, ஊழியம், செய்கிறவர்கள், நீதியின், முன்னிட்டு, எதிர்த்து, இராதே, செயல்களில், நாணாதே, அவனிடம், வாழ்வை, வரையிலும், இரக்கம், எளியவனுக்கு, முகத்தைத், மகனே, ஆன்மிகம், திருவிவிலியம், விடாதே, உன்னைச், தாயை, மீது, கொண்டு, செவி, ஏனென்றால், ஞானம்