சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 51
2 உமது பெயருக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஏனென்றால், நீர் எனக்குத் துணைவரும் பாதுகாவலரும் ஆனீர்.
3 அழிவினின்றும், அக்கிரம நாவின் வலையினின்றும், பொய்யருடைய உதடுகளினின்றும் என் உடலைக் காப்பாற்றினீர். என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு முன்பாக எனக்குத் துணைவர் ஆனீர்.
4 உமது பெயரின் இரக்கப் பெருக்கத்திற்குத் தகுந்த வண்ணம், என்னை விழுங்க நினைப்பவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.
5 என் ஆன்மாவைத் தேடுகிறவர்களுடைய கைகளினின்றும், என்னைச் சுற்றிக் கொண்ட துன்பங்களின் வாயில்களினின்றும்,
6 என்னைச் சூழ்ந்து கொண்ட நெருப்பின் நெருக்குதலினின்றும் என்னைக் காப்பாற்றினீர்@ நானும் நெருப்பில் வெந்து போகவில்லை.
7 நரகக் குழியின் பாதாளத்தினின்றும், அருவருப்பான நாவினின்றும், பொய்யான வார்த்தையினின்றும், அக்கிரம அரசனினின்றும், அநியாய நாவினின்றும் என்னைக் காப்பாற்றினீர்.
8 மரணமட்டும் என் ஆன்மா ஆண்டவரைத் துதிக்கும்.
9 என் உயிர் பாதாளத்தின் அண்மையில் இருந்தது.
10 நரக வேதனைகள் நாலா பக்கத்திலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தன. எனக்கு உதவி செய்வார் ஒருவரும் இல்லை. நான் மனிதரிடத்தில் உதவி தேடினேன்.
11 ஒருவரும் உதவவில்லை. ஆண்டவரே, உமது இரக்கத்தையும், தொடக்க முதல் நீர் செய்தவைகளையும் நினைத்துக் கொண்டேன்.
12 ஆண்டவரே, உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர்களை நீர் விடுவிக்கிறீர்@ அவர்களை மக்களுடைய கைகளினின்று காப்பாற்றுகிறீர்.
13 என் உறைவிடத்தைப் பூமியில் உயர்த்தினீர். வரவிருக்கும் சாவினின்று காப்பாற்ற உம்மை மன்றாடினேன்.
14 என் ஆபத்து நாளில் என்னைக் கைவிடாதபடிக்கும், செருக்குற்றோருடைய காலத்தில் என்னைத் துணைவரில்லாமல் விடாதபடிக்கும் என் ஆண்டவருடைய தந்தையாகிய கடவுளை மன்றாடினேன்.
15 நான் இடைவிடாமல் உமது பெயரைத் துதிப்பேன்@ என் நன்றியறிதலோடு அதை வாழ்த்துவேன். என் வேண்டுதல் கேட்கப்பட்டது.
16 அழிவினின்று என்னைக் காப்பாற்றினீர், அக்கிரம காலத்தினின்று என்னை விடுவித்தீர்.
17 ஆகையால் உமக்கு நன்றியறிந்த புகழ்ச்சி கூறுவேன். ஆண்டவருடைய பெயரைத் துதிப்பேன்.
18 நான் இளைஞனாய் இருந்த போதே, தவறிப் போவதற்கு முந்தியே, என் செபத்தில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்.
19 கடவுள் ஆலயத்திற்கு முன்பாக அதற்காக மன்றாடினேன். இறுதிவரை அதைப் பின்பற்றுவேன். காலத்திற்கு முன் பழுக்கும் கொடிமுந்திரிப் பழத்தைப் போல் அது என்னிடம் வளமுற்றது.
20 என் இதயம் அதன்பால் மகிழ்ச்சி கொண்டது. என் பாதம் செவ்வழி நடந்தது. என் இளமை முதல் நான் அதை ஆராய்ந்தேன்.
21 தாழ்மையாய் என் செவியைச் செலுத்தினேன்.
22 அதை அடைந்தேன். என்னிடம் மிகுந்த ஞானத்தைக் கண்டேன். அதில் மிகவும் விருத்தி அடைந்தேன்.
23 எனக்கு ஞானம் கொடுக்கிறவரை மகிமைப்படுத்துவேன்.
24 அதைச் செய்வதற்குத் தீர்மானம் செய்து கொண்டேன். நன்மை செய்வதில் பெரும் முயற்சியெடுத்தேன். நான் கலக்கம் அடைய மாட்டேன்.
25 என் ஆன்மா அதில் போராடினது. அதைச் செய்வதில் நான் உறுதிப்படுத்தப்பட்டேன்.
26 என் கைகளை உயர்த்தினேன். அவற்றின் மூடத்தனத்தைப்பற்றிப் புலம்பினேன்.
27 ஞானத்தை நோக்கி என் ஆன்மாவை நடத்தினேன். அறிவில் அதைக் கண்டேன்.
28 தொடக்கத்திலேயே அதனுடன் என் இதயத்தை ஒன்றித்தேன். ஆதலால், நான் கைவிடப்பட மாட்டேன்.
29 அதைத் தேடுவதில் என் உள்ளம் கலங்கினது. ஆதலால் மேலான நன்மையைக் கைக்கொள்வேன்.
30 வெகுமதியாக ஆண்டவர் எனக்கு நாவைக் கொடுத்தார். அதைக்கொண்டு அவரைப் போற்றுவேன்.
31 படிக்காதவர்களே, என்னிடம் அணுகி வாருங்கள். நன்னெறியின் வீட்டில் வந்து கேளுங்கள்.
32 ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்கள் ஆன்மாக்கள் வெகு தாகமாய் இருக்கின்றன. என் வாயைத் திறந்து பேசினேன்.
33 பணமில்லாமல் அதை அடைந்து கொள்ளுங்கள்.
34 உங்கள் கழுத்தை நுகத்தடிக்குக் கீழ்ப்படுத்துங்கள். உங்கள் ஆன்மா நன்னெறியை ஏற்றுக் கொள்ளக் கடவது. ஏனென்றால், அதைச் சீக்கிரம் கண்டடையலாம்.
35 உங்கள் கண்களால் பாருங்கள். ஏனென்றால், நான் சொற்ப முயற்சி செய்தேன்@ ஆனால், வெகு இளைப்பாற்றியைக் கண்டேன்.
36 மிகுந்த பணத்தொகை போல நன்னெறியைப் பெற்றுக் கொள்ளுங்கள். திரளான பொன்னைப் போல அதை வைத்திருங்கள்.
37 ஆண்டவருடைய இரக்கத்தில் உங்கள் ஆன்மா மகிழ்ச்சியடையக்கடவது. அவருடைய புகழ்ச்சியில் கலக்கம் அடைய மாட்டீர்கள்.
38 காலத்திற்கு முந்தியே உங்கள் வேலையை நடத்துங்கள். காலம் வரும் போது அவர் உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, நான், உங்கள், ஏற்பாடு, என்னைக், உமது, காப்பாற்றினீர், என்னைச், ஆன்மா, பழைய, சீராக், ஆண்டவருடைய, அதைச், கண்டேன், என்னிடம், மன்றாடினேன், எனக்கு, ஏனென்றால், அக்கிரம, ஆகமம், நீர், ஆன்மிகம், அதில், மிகுந்த, அடைந்தேன், உமக்கு, கொள்ளுங்கள், வெகு, திருவிவிலியம், அடைய, மாட்டேன், கலக்கம், காலத்திற்கு, செய்வதில், ஆதலால், நன்றியறிந்த, சூழ்ந்து, நாவினின்றும், கொண்ட, ஆனீர், முன்பாக, என்னை, எனக்குத், உதவி, வணக்கம், பெயரைத், கொண்டேன், ஆண்டவரே, ஒருவரும், தேடினேன், முந்தியே