முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 41. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர் வீ வேங்கை
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப; பண் அமை முழவும், பதலையும், பிறவும், கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி, காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் |
5 |
கை வல் இளையர் கடவுள் பழிச்ச; மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப் பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன் மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, |
10 |
சேஎர் உற்ற செல்படை மறவர், தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு, வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும் மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் |
15 |
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே: தாவல் உய்யுமோ மற்றே-தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், |
20 |
மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து, வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண் வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் |
25 |
கடும் பரிப் புரவி ஊர்ந்த நின், படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மறவர், உளைக், கடும், பெருஞ், எழுந்த, வண்ணம், சுடர், இளையர், துறை