முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
பதிற்றுப்பத்து - 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : பூத்த நெய்தல்
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும், ஏறு பொருத செறு உழாது வித்துநவும், கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங் கண் எருமை நிரை தடுக்குநவும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் |
5 |
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும், ஒலி தெங்கின், இமிழ் மருதின், புனல் வாயில், பூம் பொய்கை, பாடல் சான்ற பயம் கெழு வைப்பின், நாடு கவின் அழிய, நாமம் தோற்றி; |
10 |
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்- விரி பூங் கரும்பின் கழனி புல்லென, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி, கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க, |
15 |
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து- உள்ளம் அழிய, ஊக்குநர், மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே. காடே கடவுள் மேன; புறவே |
20 |
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன; ஆறே அவ் அனைத்து: அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது |
25 |
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப, நோயொடு பசி இகந்து ஒரீஇ, பூத்தன்று-பெரும!-நீ காத்த நாடே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கெழு, மருங்கின், அழிய, குடி, கரும்பின், நெய்தல், நாடு, வண்ணம், பூத்த, சிறப்பும்