பரிபாடல் - 20. வையை
(பருவ வலின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச்
சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்
புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து, உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை முற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்-- பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. |
5 |
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான் வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம், தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; |
10 |
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை. புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வசை தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப, ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில் நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, |
15 |
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும், வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும், வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும், கயமாப் பேணிக் கலவாது ஊரவும், மகளிர் கோதை மைந்தர் புனையவும், |
20 |
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும், முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர், ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி, மாட மறுகின் மருவி மறுகுற, |
25 |
கூடல் விழையும் தகைத்து--தகை வையை. |
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த
நிகழ்ச்சி
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார், தகை வகை தைஇயினார் தார்; வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச் சூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும் |
30 |
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின் அயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர் இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக, கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு, நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க, |
35 |
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதாம்
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்; செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன நேர் இதழ் உண்கணார் நிரை காடாக, ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின். தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல் என--ஆங்கு, |
40 |
ஒய்யப் போவாளை, 'உறழ்த்தோள் இவ் வாணுதல்' வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று, 'செறி நிரைப் பெண்' --வல் உறழ்பு--'யாது தொடர்பு?' என்ன மறலினாள், மாற்றாள் மகள். |
45 |
தலைமகளின் திகைப்பு
வாய் வாளா நின்றாள், செறிநகை சித்தம் திகைத்து. |
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம் மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை! பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் |
50 |
துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி! முற்றா நறு நறா மொய் புனல் அட்டி, காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில், மூரி தவிர முடுக்கு முது சாடி! மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் |
55 |
தட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால் இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத் தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப் பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ் வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, |
60 |
மத்திகை மாலையா மோதி, அவையத்துத் தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம், தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும், நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்-- |
65 |
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு ஊடினார், வையையகத்து, 'சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க; மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை வந்திக்க வார்' என --- 'மனத் தகக நோய் இது; |
70 |
பரத்தையின் பதில் உரை
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு; போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று, மாற்றாளை மாற்றாள் வரவு.' |
தலைவி கூற்று
'அ... சொல் நல்லவை நாணாமல் தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; |
75 |
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண் வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல், தந்தானைத் தந்தே, தருக்கு.' |
பரத்தையின் மறுமொழி
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான்; சால, |
80 |
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்; கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.' என ஆங்கு-- |
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல் வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. |
85 |
தலைமகளுக்கு முனிவி நீங்க உரைத்தல்
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்; நிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்! |
90 |
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர் அகலம் கடிகுவேம்' என்பவை யார்க்கானும் முடி பொருள் அன்று--முனியல்! கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!' வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் கருங்கை வழியே பாயும் காட்சி என--ஆங்கு |
95 |
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும், தென்னவன் வையைச் சிறப்பு, கொடி இயலார் கைபோல் குவிந்த முகை, அரவு உடன்றவைபோல் விரிந்த குலை, குடை விரிந்தவை போலக் கோலும் மலர், |
100 |
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர், சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும், அருவி சொரிந்த திரையின் துரந்து; நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து-- கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்-- |
105 |
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல் கடி மதில் பெய்யும் பொழுது. |
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு
நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும், காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட, தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் |
110 |
பூ மலி வையைக்கு இயல்பு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல், Paripadal, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாற்றம், வையை, நீர், ஆங்கு, மலர், உரைத்தல், மகளிர், ஆற்றும், அமர், மாலை, தைஇயினார், கூடல், நோக்கி, சொல், கூற்று, மைந்தர், பரத்தை, மாற்றாள், கடல், ஆர்த்தும், தந்து, இன்று, தொட்டு, காமம், கலந்து, பரத்தையை, மார்பும், புனல், தான், நெடு, வையைக்கு, இயல்பு, கருங்கை, கொடி, கண்டு, பரத்தையின், அன்பன், நின், ஒய்யப், தலைமகனது, கண்ட, திண், தகைத்து, ஊரவும், தார், பொய்தல், மணல், புதுப், அயல், கள்வன், காண்மின், இதழ், உடன், முற்றுபு, வந்து, சென்ற, கோதை