பரிபாடல் - 15. திருமால்
15. திருமால்
பாடியவர் :: இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்
கடவுள் வாழ்த்து
திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து, நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத் தொலையா நேமி முதல், தொல் இசை அமையும் புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம் பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், |
5 |
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன் நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே: சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும் மலர் அகல் மார்பின் மை படி குடுமிய குல வரை சிலவே: குல வரை சிலவினும் |
10 |
சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும், புல்லிய சொல்லும் பொருளும் போலவும், எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம். நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை |
15 |
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்? அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப. |
திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துகா
எனல்
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின் மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, |
20 |
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய, சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின் சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்-- தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்-- நாமத் தன்மை நன்கனம் படி எழ, |
25 |
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து, மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென, பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்! |
மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் | 30 |
சினையெலாம் செயலை மலர, காய் கனி உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர, மாயோன் ஒத்த இன் நிலைத்தே. |
சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே-- இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே |
35 |
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள். |
குன்றத்தில் பிறக்கும் ஓசைகள்
மக முயங்கு மந்தி வரைவரை பாய, முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட, மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, |
40 |
குருகு இலை உதிர, குயிலினம் கூவ, பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன, சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க் கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. |
45 |
குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்
தையலவரொடும், தந்தாரவரொடும், கைம் மகவோடும், காதலவரொடும், தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்-- புவ்வத் தாமரை புரையும் கண்ணன், வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், |
50 |
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான். |
பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; ஒள் ஒளியவை, ஒரு குழையவை; |
55 |
புள் அணி பொலங் கொடியவை; வள் அணி வளை நாஞ்சிலவை, சலம் புரி தண்டு ஏந்தினவை; வலம்புரி வய நேமியவை; வரி சிலை வய அம்பினவை; |
60 |
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை; என ஆங்கு- நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை, 'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என, பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. |
66 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல், Paripadal, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கண்டு, சீர், திருமால், இருங்குன்றத்து, இருள், தன்மை, ஒத்த, தோன்றி, இணர், மயங்கு, புகர், பெயர், இருங்குன்று, எனல், சென்று, சூழ், மாலிருங்குன்றம், ஆங்கு, சிலவே, குன்றம், புனை, கடவுள், உரைத்த, சிலவினும், தெய்வம், நிலை, பெறு, வேறு, போலவும், மார்பின், துறக்கம்