பாலக்-பனீர் ரோல்ஸ்
தேவையானவை: டெல்லி பாலக் (பசலைக்கீரை) - 10 இலை, பனீர் - 50 கிராம், சீஸ் - ஒருதுண்டு, பச்சை மிளகாய் - 2, கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் - 2 டீஸ்பூன், உப்பு -ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பனீர், சீஸ் இரண்டையும் துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைப் பொடியாகநறுக்குங்கள். மூன்றையும் கலந்துகொள்ளுங்கள். பசலைக்கீரையைக் கழுவி,துடைத்துக்கொள்ளுங்கள். பனீர்-சீஸ் கலவையை இலையில் வைத்து ஒரு சுருட்டு சுருட்டி, இரண்டுபக்கவாட்டிலும் உள்ள இலையை நடுவில் வருவது போல மடித்துவிட்டு, மீண்டும் சுருட்டி,(பிரிந்துவிடாமல் இருக்க) ஒரு கிராம்பைக் குத்திவிடுங்கள். கார்ன்ஃப்ளாரையும் ரஸ்க் தூளையும்பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, சுருட்டிய பாலக் ரோல்களை, கரைத்த மாவில் தோய்த்து, காயும்எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலக்-பனீர் ரோல்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, சீஸ், பனீர், Recipies, சமையல் செய்முறை