சேனைக்கிழங்கு மிக்சர்
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன், வறுத்தவேர்க்கடலை - ஒரு பிடி, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு -அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.
செய்முறை: சேனைக்கிழங்கை நன்கு மண் போகக் கழுவி, கடலைப்பருப்பு அளவுக்கு சிறு சிறுசதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில்வையுங்கள். ஒரு கொதி வந்ததும், இறக்கி தண்ணீரை வடித்துவிடுங்கள். எண்ணெயைக்காயவைத்து, கிழங்கைப் போட்டு மொறுமொறுவெனப் பொரித்தெடுங்கள். கறிவேப்பிலையையும்போட்டுப் பொரித்து அள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், பொரித்த கிழங்கு, பொட்டுக்கடலை, வறுத்தவேர்க்கடலை, மிளகாய்தூள் போட்டு நன்கு கலந்துவையுங்கள். கொரிப்பதற்குக் கிடைத்து விட்டது காரமான கரகர மிக்சர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேனைக்கிழங்கு மிக்சர், 30 வகையான வறுவல், 30 Type Varuval, போட்டு, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை