சேப்பங்கிழங்கு சாப்ஸ்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் -தேவையான அளவு. அரைக்க: மிளகு - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பூண்டு - 5பல், இஞ்சி - ஒரு துண்டு, பட்டை - 1.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கைகுழைந்துவிடாமல் வேகவைத்து, தோல் உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்குங்கள். அரைத்தமசாலா, உப்பு, கார்ன்ஃப்ளார் ஆகியவற்றை கிழங்கில் சேர்த்துப் பிசறி, காயும் எண்ணெயில்போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேப்பங்கிழங்கு சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை