வெண்டைக்காய் வறுவல்
தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள்- கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் -ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி, நீளவாக்கில் 6 துண்டுகளாக நறுக்குங்கள். வெண்டைக்காய்,எண்ணெய் தவிர, கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கலந்துகொள்ளுங்கள். வெண்டைக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பிசறி, எண்ணெயைக்காயவைத்துப் பொரித்து அள்ளுங்கள். எதற்குமே தொட்டுக்கொள்ள வேண்டாம். அப்படியேசாப்பிட்டு, காலிசெய்துவிடுவார்கள் குழந்தைகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெண்டைக்காய் வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், கால், வெண்டைக்காய், Recipies, சமையல் செய்முறை