ஊறவைத்த ரசம்
தேவையானவை: புளிப்பு தக்காளி - 1, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். அரைக்க: கடலைப்பருப்பு - ஒருடீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4,தனியா - 2 டீஸ்பூன், வறுத்த மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு -கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது, எண்ணெய் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றில், மிளகைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அரை மணிநேரம் ஊறவைத்து, கடைசியாக மிளகை வறுத்து, பருப்புடன் சேர்த்து நீர்விட்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். புளியை இரண்டு கப் நீர் விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி உப்பு சேர்த்துதக்காளியையும் பொடியாக நறுக்கி, அதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். சிறிது கொதி வந்தவுடன்அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், அரைத்து வைத்துள்ள பருப்புகள் இவற்றைக் கொட்டிபொங்கி நுரைத்து வரும் சமயம் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஊறவைத்த ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை