பிளம்ஸ் ரசம்
தேவையானவை: மைசூர்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பிளம்ஸ் துண்டுகள் - கால் கப். ரசப்பொடிக்கு: தனியா - 3டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்,சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - கால் டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய்- கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: ரசப்பொடிக்கு வேண்டியவற்றை வறுத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.மைசூர்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பிளம்ஸ் பழங்களை வாங்கிசிறிய துண்டுகளாக சீவி, இரண்டு கப் நீர்விட்டு உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர்உப்பு, பெருங்காயம், ரசப்பொடி எல்லா வற்றையும் போட்டு கொதித்ததும், வேகவைத்தமைசூர்பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் இறக்கி கடுகு, கொத்தமல்லி,கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.குறிப்பு: நாம் வாங்கும் பிளம்ஸ் சில நேரங்களில் புளிப்புச் சுவையுடன் இருக்கும். அவற்றில் இந்தரசம் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிளம்ஸ் ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கால், நன்றாக, பிளம்ஸ், Recipies, சமையல் செய்முறை