கொட்டு ரசம்
தேவையானவை: புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - கால்டீஸ்பூன். ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒருடீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5. தாளிக்க: நெய் - கால் டீஸ்பூன்,கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை வறுக்காமல் பொடித்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர்விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகுபொடியை போட்டு, நெய்யில் கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். குறிப்பு:தக்காளி விரும்பினால் சேர்க்கலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சுவையில் பெரியவித்தியாசம் இருக்காது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொட்டு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை