பிள்ளை பெற்றாள் ரசம்
தேவையானவை: பழைய புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன்.ரசப்பொடிக்கு: மிளகு - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் (சிறியது) - 1, கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு, நெய் - கால் டீஸ்பூன்.தாளிக்க: நெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: பொடிக்கக் கொடுத்தவற்றை கால் டீஸ்பூன் நெய்விட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். புளியையும் உப்பையும் தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். புளியை 2கப் நீர்விட்டு கரைத்து வடிகட்டி, உப்பையும் போட்டு கொதிக்க விடவும். பின்னர் பொடியைப்போட்டு கொதித்ததும் இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை இரண்டையும் தாளித்துக் கொட்டவும்.குழந்தை பெற்ற பெண்களுக்கு வைத்துக் கொடுக்கும் ரசம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிள்ளை பெற்றாள் ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை