திப்பிலி ரசம்
தேவையானவை: புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன். ரசப்பொடிக்கு: திப்பிலி குச்சி - 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - ஒருடீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: நெய் - கால் டீஸ்பூன்,கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: பொடிக்கு தேவையானவற்றை கால் டீஸ்பூன் நெய்விட்டு, வறுத்து பொடித்துக்கொள்ளவும். புளியை 2 கப் நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயம் சேர்த்துகொதிக்க வைக்கவும். பிறகு பொடியைப் போட்டு, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துஇறக்கவும். (திப்பிலிகுச்சி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
திப்பிலி ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை