வேப்பம்பூ ரசம்

தேவையானவை: புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன், காய்ந்த வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: முதலில் புளியை இரண்டரை கப் நீர் விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி வைத்து விடவும். பிறகு வாணலியில்எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும், அதில் வேப்பம்பூவையும் மிளகாயையும்கிள்ளிப்போட்டும் வறுக்கவும். (வேப்பம் பூ கறுப்பாக வறுபட வேண்டும். இல்லையென்றால் ரசம்கசக்கும்). பின்னர் வறுத்த வேப்பம்பூவை கொதித்து இறக்கிவைத்த ரசத்தில் போட்டுமூடிவைக்கவும். பின்னர் அரை மணிநேரம் கழித்து ஊற்றி சாப்பிட லாம். அப்போதுதான்வேப்பம்பூவின் மணம் ரசத்தில் இறங்கி இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேப்பம்பூ ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை