ஸ்பாஞ்ச் தோசை

தேவையானவை: பச்சரிசி-2 கப், உளுத்தம்பருப்பு-கால் கப், அவல்-அரை கப், வெந்தயம்-கால்டீஸ்பூன், ஜவ்வரிசி-கால் கப், உப்பு-தேவையான அளவு, தேங்காய் துருவல்-கால் கப்.
செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஜவ்வரிசி, அவல்இரண்டையும் தனித்தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, எல்லாவற்றையும்ஒன்றாகச் சேர்த்து, நைஸாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து, 6 முதல் 8 மணி நேரம்வரை புளிக்க விடுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை ஊற்றி, சற்றுகனமாகப் பரப்புங்கள். குறைந்த தீயில் மூடி போட்டு வேக விட்டு, பஞ்சு போல வெந்ததும்எடுங்கள். இதற்கு எண்ணெயும் தேவையில்லை. தோசையை திருப்பிப் போடவும் வேண்டாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்பாஞ்ச் தோசை, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, கால், Recipies, சமையல் செய்முறை