தால்
தேவையானவை: பாசிப்பருப்பு-அரை கப், மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம்-1,தக்காளி-2, பச்சைமிளகாய்-2, பூண்டு-5 பல், எலுமிச்சம்பழச் சாறு-ஒரு டேபிள்ஸ்பூன்,மல்லித்தழை-சிறிதளவு.தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், சீரகம்-அரை டீஸ்பூன், எண்ணெய்-2 டீஸ்பூன்,கறிவேப்பிலை-சிறிது, உப்பு-தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்குங்கள். பச்சைமிளகாயைக்கீறிக்கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் மலர வேகவையுங்கள்.வெந்த பாசிப்பருப்புடன் நறுக்கிய காய்களையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, காய்வேகுவதற்கு அளவான தண்ணீரையும் ஊற்றி வேகவிடுங்கள். காய்கறிகள் நன்கு வெந்தபின்,எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து சேருங்கள். மல்லித்தழையை கிள்ளிப்போட்டு,எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தால், 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, சேர்த்து, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை