கறிவேப்பிலைப் பொடி இட்லி
தேவையானவை: இட்லி-10. தாளிக்க: கடுகு-அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு-அரை டீஸ்பூன்,எண்ணெய்-2 டீஸ்பூன். வறுத்துப் பொடிக்க: கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி, மோர்மிளகாய்-4 அல்லது5, உளுத்தம்பருப்பு-ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம்-அரை டீஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் கறிவேப்பிலை, சீரகம், உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியேவறுத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, குறைந்த தீயில் மோர்மிளகாயைக்கிள்ளிப்போட்டு, நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு, மிளகாய்களை எடுத்துவிட்டு, அந்தஎண்ணெயிலேயே கடுகைச் சேர்த்துப் பொரியவிட்டு இறக்குங்கள். மோர் மிளகாய்களுடன்கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகத்தைச் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.இட்லிகளை பொடியாக நறுக்கி, பொடித்த மோர்மிளகாய்+கறிவேப்பிலைப் பொடி சேர்த்து, பொரித்தகடுகையும், ருசிக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். வித்தியாசமான, ஆனால் ருசியானமாலை நேர டிபன் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறிவேப்பிலைப் பொடி இட்லி, 30 வகையான சுவையான சமையல், 30 Type Non Oily Foods, டீஸ்பூன், சேர்த்து, உளுத்தம்பருப்பு, நன்கு, Recipies, சமையல் செய்முறை